மேலும் அறிய

Kangana Ranaut: வில்லன்..காமெடி.. இன்ஸ்டா மூலம் மறைமுக தாக்குதல் - வார்த்தைகளால் வெடிக்கும் கங்கனா!

Kangana Ranaut Post:தன் 'தாக்கட்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு சற்று அமைதியாக வலம் வந்த கங்கனா, தற்போது தன்னை சீண்டிய யாரையோ தாக்கி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

தன் நடிப்புத் திறமையால் நான்கு தேசிய விருதுகளை இளம் வயதிலேயே வாங்கிக் குவித்த கங்கனா ரனாவத் (Kangana Ranaut), சமீப காலமாக அறியப்படுவது அவரது சர்ச்சைக் கருத்துகளால் தான்.

சர்ச்சைகளின் நாயகி


Kangana Ranaut: வில்லன்..காமெடி.. இன்ஸ்டா மூலம் மறைமுக தாக்குதல் - வார்த்தைகளால் வெடிக்கும் கங்கனா!

பாலிவுட் சினிமா தொடங்கி இந்திய அரசியல் வரை எங்கும் கருத்து சொல்லியும், வாரம் தோறும் பரபரப்பு கிளப்பியும் சர்ச்சைகளின் நாயகியாக வலம் வந்த நடிகை கங்கனா ,  தன் ’தாக்கட்’ படத்தின் படுதோல்விக்குப் பிறகு சற்று அமைதியாக வலம் வருகிறார்.

இந்நிலையில், தன் கருத்துகளுக்காக தன்னை இணையத்திலும், சினிமா துறையிலும் கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் தன் கருத்து ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார் கங்கனா!

இப்படியெல்லாம் உங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள்

இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள கங்கனா, “அவமானங்கள், தோல்விகள் அல்லது ஒருவரை கேலி செய்து கொடுமைப்படுத்துதல் போன்ற உணர்ச்சிகளைத் தூண்டும் நியாயமற்ற நடத்தைகளையும்,  அந்த அனுபவங்களைக் கொண்டு நம்மையும் நம் லட்சியங்களையும் வளர்த்துக் கொள்வது போன்ற செயல்களை நான் ஒருபோதும் விரும்புவதில்லை.


Kangana Ranaut: வில்லன்..காமெடி.. இன்ஸ்டா மூலம் மறைமுக தாக்குதல் - வார்த்தைகளால் வெடிக்கும் கங்கனா!

உங்களைப் பாராட்டத் தவறியவர்களின் கண்கள் வழியாக உங்களை ஒருபோதும் பார்க்காதீர்கள்... ஆனால் அவர்களின் விமர்சனங்களை நீங்கள் வளர பயன்படுத்துங்கள்.

நீங்கள் வளரும்போது அதை அவர்களின் முகத்துக்கு நேராகக் காட்டி அதனைப் பார்த்து ரசிக்க மறக்காதீர்கள். அனைத்துக்கும் மேலாக மகிழ்ச்சியான சிரிப்பு இன்றி வாழ்வது என்ன வாழ்க்கை? உங்கள் வாழ்க்கையில் வில்லனாக விரும்புபவர்களை நகைச்சுவை நடிகர்களாக்கினால் அது ஒரு நல்ல கதையாக இருக்கும். அக்கதையை நீங்களே இயக்குங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

கரண் ஜோஹரை தாக்கி பதிவு?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் குறித்து கரணை தொடர்ந்து தாக்கி வரும் கங்கனா, தற்போது காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் சீசன் 7 நடைபெற்று வருவதால் அவரை தான் மீண்டும் தாக்கி எழுதியிள்ளாரோ என அவரது ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

’எமெர்ஜென்சி’ படத்தில் தற்போது இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா நடித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget