Emergency Movie Twitter Review; கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவ்யூவ்
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்து ட்விட்டரில் வலம் வரும் விமர்சனங்கள் குறித்து காணலாம்.
![Emergency Movie Twitter Review; கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவ்யூவ் kangana Ranaut's Emergency movie reviews in twitter Emergency Movie Twitter Review; கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் ரிவ்யூவ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/17/e48e3bf8b2f8bfd74eee43223b4d37fd17370960271301179_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சர்ச்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இயக்கி நடித்திருக்கும் படம்தான் எமர்ஜென்சி. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாக உருவான இது, அவரது ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை மையமாகக் கொண்டுள்ளது.
தயாரித்து, இயக்கி நடித்துள்ள கங்கனா ரனாவத்
இந்த படத்தை, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ரேணு பிட்டியுடன் இணைந்து தயாரித்துள்ள கங்கனா ரனாவத், படத்தின் கதையை எழுதி இயக்கி உள்ளார். திரைக்கதையை ரிதேஷ் ஷா எழுதியுள்ளார். படத்தின் பாடல்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமாரும், அர்கோவும் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை சஞ்சித் பல்ஹாரா மற்றும் அங்கித் பல்ஹாரா அமைத்துள்ளனர்.
இந்த படத்தில் அனுபம் கேர், ஸ்ரேயாஸ் தல்படே, மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன், சதீஷ் கவுஷிக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். டெட்சுவோ நகாடா ஒளிப்பதிவும், ராமேஷ்வர் எஸ். பகத் படத்தொப்பும் செய்துள்ளனர்.
எமர்ஜென்சி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள்
கங்கனா ரனாவத் இயக்கி நடித்ததால், மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் இன்று(17.01.25) வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் குறித்து, ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள விமர்சனங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
எமர்ஜென்சி திரைப்படம் கறித்து ட்விட்டரில் தனது கருத்தை பகிர்ந்துள்ள திரைப்பட விமர்சகர் ஒருவர், இந்த படம் மூலம், தான் ஒரு சிறந்த நடிகை என்றும் இயக்குநர் என்றும் கங்கனா தனது திறமையை நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது கதாபாத்திரத்திற்கு நேர்மையை கொண்டு வருவதாக கூறியுள்ளார். அனுபம் கேர், ஸ்ரேயாஸ் தல்படே ஆகியோர் தங்கள் கதாபாத்திரங்களின் சாரத்தை அப்படியே படம்பிடித்து காட்டியுள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.
With #Emergency, #KanganaRanaut once again proves her talent as an actor and director. She brings honesty to her own character and elevates the performances of the other actors. #AnupamKher and #ShreyasTalpade shine, perfectly capturing the essence of their roles. The film… pic.twitter.com/fI15MJKpFS
— Atul Mohan (@atulmohanhere) January 17, 2025
இதேபோல், திரைப்படங்கள் குறித்த விமர்சன இணையம் ஒன்று கூறுகையில், எமர்ஜென்சி திரைப்படம், இந்திரா காந்தியின் பின்னடைவு மற்றும் உறுதியை அற்புதமாக படம்பிடித்து, துன்பங்களுக்கு மத்தியில் அவர் அதிகாரத்திற்கு வந்ததை ஊக்கமளிக்கும் விதமாக சித்தரிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், ஒவ்வொரு காட்சியிலும் தனது அழுத்தமான நடிப்பின் மூலம் படத்தை கங்கனா ரனாவத் திறம்பட நகர்த்துவதாகவும் புகழாரம் சூட்டியுள்ளது.
#EmergencyReview : ⭐⭐⭐⭐#Emergency brilliantly captures the resilience & determination of #IndiraGandhi, offering an inspiring portrayal of her rise to power amidst adversity. #KanganaRanaut carries the film with her sheer presence, leaving a lasting impression with every… pic.twitter.com/0VfRokemOI
— Always Bollywood (@AlwaysBollywood) January 17, 2025
எமர்ஜென்சி திரைப்படம் குறித்த விமர்சனத்தை வெளியிட்டுள்ள மற்றொரு இணையம், படம் முழுக்க முழுக்க கங்கனாவின் ஆதிக்கத்தில் மிளிர்வதாக தெரிவித்துள்ளது. அரசியல் படங்களை விரும்புபவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு 4 ஸ்டார் ரேட்டிங்கையும் கொடுத்துள்ளது அந்த இணையம்.
#Emergency Review By RJ @DIVYASOLGAMA (4/5)⭐️⭐️⭐️⭐️
— Bollywood Spy (@BollySpy) January 17, 2025
Watch Out- https://t.co/GEpawAEbHj
‘It’s a #KanganaRanaut show all the way!’
A must watch for everyone who loves political dramas.
A intense, gripping and well crafted film.@KanganaTeam @ManikarnikaFP @AnupamPKher… pic.twitter.com/PyoPaUzyG0
ட்விட்டரில் படம் குறித்து விமர்சனம் எழுதியுள்ள மற்றொருவர், இந்த படத்தில் கங்கனாவின் நடிப்பிற்கு தேசிய விருதே கொடுக்கலாம் என எழுதியுள்ளார். இப்படி, எமர்ஜென்சி திரைப்படத்திற்கு இணையத்தில் பெரும்பாரும் நல்ல விமர்சனங்கள் பதிவாகி வருவதால், அது படத்தின் வசூலிலும் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)