Dhaakad fails at Box Office: 8 ஆவது நாளில் வெறும் 20 டிக்கெட்டுகள்.. காலியான கங்கனா.. தாகத்தின் பரிதாப நிலை..!
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாகத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தாகத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ‘தாகத்’ திரைப்படம் பெருந்தோல்வி அடைந்த நிலையில், படம் வெளியான 8 ஆவது நாளில் இந்திய அளவில் வெறும் 20 டிக்கெட்டுகளே விற்றுள்ளதாகவும், இதன் மூலம் கிடைத்த வருமானம் வெறும் 4,420 ரூபாய் மட்டுமே என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
#Dhaakad today collects 4 thousand by selling 20 tickets across India. Meanwhile India's No.1 female star #AliaBhatt's #GangubaiKathiawadi collected 5.01 cr nett on second Friday.
— Indian Box Office (@box_oficeIndian) May 27, 2022
கங்கனா ரனாவத்தின் நடிப்பில் ரஸ்னீஷ் காய் இயக்கத்தில் உருவாகியிருந்த ‘தாகத் ’ திரைப்படம் கடந்த மே 20 அன்று வெளியானது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் படுதோல்வியை சந்தித்தது. பொதுவாக ஒரு படம் திரையங்குகளில் வெளியாவதற்கு முன்னரே அதன் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை தயாரிப்பாளர்கள் விற்றுவிடுவர்.
View this post on Instagram
ஆனால் ‘தாகத்’ திரைப்படத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் படம் திரையரங்குகளில் வெளியான பின்னர் பெருந்தொகைக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்டு இருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை. இதனால் எந்த நிறுவனமும் ‘தாகத்’ படத்தை வாங்கி ஒளிப்பரப்புவதற்கான உரிமையை வாங்க முன்வரவில்லை. 80 கோடி முதல் 90 கோடி ரூபாய் வரையிலான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப்படம் 3 கோடி கூட வசூலிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் தாகத் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
Zee studios நிறுவனம் ‘தாகட்’ திரைப்படத்தை விநியோகித்திருந்தாலும் ஓடிடி உரிமையை கைப்பற்ற வில்லை. இந்த நிலையில் ‘தாகத்’ தயாரிப்பாளர்கள் அமேசான் நிறுவனத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.