(Source: ECI/ABP News/ABP Majha)
காஞ்சிபுரத்தில் அகற்றப்பட்ட வாரிசு மற்றும் துணிவு பட கட்டவுட் ... வருவாய் கோட்டாட்சியர் போட்ட அதிரடி உத்தரவு.. என்னாச்சு?
திரையரங்குகளில் கட்டப்பட்ட பேனர் கட் அவுட்டுகளை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி அதிரடி உத்தரவு
ஒரே நாளில் வெளியீடு:
கடந்த 2014 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த ஜில்லா மற்றும் அஜித் நடித்த வீரம் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. அதன் பின்னர் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகியுள்ளது, ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் இரண்டு படங்களும் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் வெளியானதால், பலத்தை நிரூபிக்க விஜய், அஜித்தின் ரசிகர்கள் திரையரங்குகளில் சேட்டையை சேவைபோல் செய்து வருகின்றனர்.
இன்று ( ஜனவரி 11 ) நள்ளிரவில் அஜித் நடிப்பில் வெளியான ’துணிவு’ திரைப்படம் இரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது. அப்போது, சில திரையரங்குகளில் இரு ரசிகர்களும் தங்களது நடிகர்களின் கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர். அதே நேரத்தில் போட்டியாக நினைக்கும் நடிகர்களில் கட் அவுட்களை கிழித்து அட்டகாசமும் செய்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்களால் பல திரையரங்குகளில் இரு நடிகர்களின் ரசிகர்களுக்குள் சண்டை ஏற்பட்டு வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் வைத்து வருகின்றனர். இந்நிலையில், திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்றும் பொங்கல் பண்டிகையையும் கருத்தில்கொண்டும் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.