Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு
Kanagana Ranaut : ராமரின் சிலையை செதுக்கிய மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜை பாராட்டி குறிப்பு ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.
![Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு Kanagana Ranaut praises the sculptor who made the Ramar idol ahead of pratishtha ceremony Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/a45c57e10c4e1c0999517494fa24643d1705749921141224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ram Temple : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அயோத்தியில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்ய உள்ள நிலையில் ஏராளமான வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.
![Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/e143b8a71eb2ae62f9b581ff1aaab0191705749953744224_original.jpg)
கங்கனாவின் பாராட்டு :
மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் தான் 300 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லில் ராமரின் சிலையை செதுக்கி வடிவமைத்துள்ளார். ராமரின் சிலையின் புகைப்படத்தை பார்த்த நடிகை கங்கனா ரனாவத் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "நான் எப்போதுமே சிறு வயதில் ராமர் இப்படித்தான் இருப்பார் என கற்பனை செய்துள்ளேன். என்னுடைய கற்பனை அப்படியே உயிர்ப்பித்துள்ளது" என குறிப்பிட்டதுடன் ராமரின் திருவுருவ சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜை டேக் செய்து பாராட்டியுள்ளார்.
"மயங்க வைக்கும் அளவுக்கு எவ்வளவு அழகாக ராமரின் சிலையை நீங்கள் வடிவமைத்துள்ளீர்கள். இதுவும் பகவான் ராமரின் ஆசீர்வாதம். அவர் உங்களுக்கு தெய்வீக தரிசனம் தந்து ஆசீர்வதிப்பார்" என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்.
அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை கங்கனா ரனாவத்திற்கும் அழைப்பு வந்துள்ளது. அதையும் அவர் ஏற்கனவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
கங்கனாவின் அறிமுகம் :
ஒரு மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட கங்கனா பின்னர் நடிப்பை தேர்ந்து எடுத்து 2006ம் ஆண்டு வெளியான 'கேங்க்ஸ்டர்' படம் மூலம் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.
மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது 'எமர்ஜென்சி' திரைப்படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளார் நடிகை கங்கனா. இந்தியாவில் அவசர கால நிகழ்வுகளை ஆராயும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் மாதவனுடன் இணைந்து சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் கங்கனா ரனாவத்.
சந்திரமுகி 2 :
'தாம் தூம்' படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கங்கனா, கடந்த செப்டம்பர் மாதம் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் வெளியான 'சந்திரமுகி 2' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)