Thug Life Box Office : விக்ரம் பட வசூலை மிஞ்சுமா தக் லைஃப்...முதல் நாளில் எத்தனை கோடி வசூலிக்கும் ?
Thug Life Bos Office : மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்களைப். பார்க்கலாம்

தக் லைஃப்
மணிரத்னம் இயக்கி கமல் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிம்பு , த்ரிஷா , ஜோஜூ ஜார்ஜ் , அபிராமி உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மெர்ட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளது. தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்
தக் லைஃப் விமரனம்
தக் லைஃப் படத்திற்கு ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. யூகிக்க கூடிய கதை , நிதானமாக நகரும் திரைக்கதை ஆகியவை படத்தின் நெகட்டிவ்களாக கூறப்படுகிறது. சிம்பு , கமலின் நடிப்பு , சண்டைக்காட்சிகள் , ரஹ்மானின் பின்னணி இசை , மேக்கிங் ஆகியவை படத்தின் பிளஸ். கமல் சிம்புவைத் தவிர்த்து த்ரிஷா , அபிராமி , ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர்கள் சரியாக பயண்படுத்தப்படவில்லை என ரசிகர்கள் அதிருப்தி காட்டி வருகிறார்கள்.
தக் லைஃப் வசூல் கணிப்பு
தமிழ், இந்தி , தெலுங்கு , மலையாளம் ஆகிய மொழிகளில் தக் லைஃப் திரைப்படம் இன்று வெளியாக இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் படம் 1000 திரையரங்குகள் வரை வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படத்தின் முன்பதிவுகளும் சிறப்பாக அமைந்துள்ளது படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதை காட்டுகிறது.
தமிழ் நாட்டில் முன்பதிவுகளில் மட்டும் தக் லைஃப் திரைப்படம் 7 கோடி வசூலித்துள்ளதாகவும் தெலுங்கு மற்றும் பிற மொழி மாநிலங்களில் 2.5 கோடி வசூலித்துள்ளதாகவும் சினி டிஸ்கோ என்கிற பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. வெளி நாடுகளில் ரு 10.30 கோடி வரை படம் வசூலித்துள்ளதாக இதில் குறிப்பிடப் பட்டுள்ளது.முன்பதிவுகள் வழியாக மட்டுமெ தக் லைஃப் படம் ரூ 20 கோடி வசூலித்துள்ளதாகவும் முதல் நாளில் உலகளவில் படம் ரூ 40 கோடிவரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கர்நாடகாவில் தக் லைஃப்
மொழி குறித்த சர்ச்சையால் கர்நாடகா மாநிலத்தில் தக் லைஃப் படம் இன்று வெளியாகவில்லை. இதனால் படக்குழுவுக்கு 10 முதல் 15 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என சினிமா ஆர்வலர்கல் கணித்துள்ளார்கள். கர்நாடகாவில் படம் வெளியாகி இருந்தால் தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் ரூ 50 கோடியை கடந்திருக்கும் என கூறப்படுகிறது
#ThugLife Worldwide Advance Bookings:
— CineDisco (@cinedisco_) June 4, 2025
Tamilnadu PreSales Crossed 7CR+
Telugu States & ROI - 2.5CR+
Overseas PreSales - 1.2M$/ 10.30CR+
Total WW Advance Bookings Crossed 20CR~ Mark
Expecting Solid 40CR+ Openings On Day 1💥💥💥
WW Business - 210CR Gross#ThugLifeFromJune5th pic.twitter.com/sXLJmI4JGy





















