விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி...! ரசிகர்களுக்கு கமல்ஹாசனின் புது உறுதிமொழி என்ன தெரியுமா..?
சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களைத் தொடர்ந்து என்டர்டெயின் செய்வேன் என்று கமல்ஹாசன் ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் படம் திரையரங்கில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தின் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மிகழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில், விக்ரம் வெற்றி குறித்து கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கமல்ஹாசன் பேசியிருப்பதாவது,
“ தமிழர்கள் இல்லாத நாடு இல்லை. தமிழ் ஓசை ஒலிக்காத ஊர் இல்லை எனும் அளவிற்கு உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம். திரையிடப்பட்ட நாடுகளில் எல்லாம் விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியை எனக்கு பரிசளித்த தொப்புள்கொடி சொந்தங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களைத் தொடர்ந்து என்டெர்டெயின் செய்வதுதான் நான் உங்களுக்கு செய்யும் நன்றி என்பதை நான் அறிவேன். அதைச் செய்வேன்.”
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
Thank you
— Raaj Kamal Films International (@RKFI) June 11, 2022
With love ,
Kamal Haasan @ikamalhaasan @Dir_Lokesh @Udhaystalin @Suriya_offl @VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial #Mahendran @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @APIfilms @PrimeMediaUS @Hamsinient @DmyCreation @RedGiantMovies_@actor_nithiin @anbariv pic.twitter.com/1eVcpbateJ
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் கோலிவுட் திரையுலகமே உற்சாகம் அடைந்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு பக்காவான ஆக்ஷன் ப்ளாக்காக விக்ரம் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் நடித்துள்ளனர்.
விக்ரம் படத்தில் கைதி படமும் கனெக்ட் செய்யப்பட்டிருப்பதாலும், ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா கிளைமேக்சில் மிரட்டியிருப்பதாலும் அடுத்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். மேலும், அடுத்த பாகங்களில் நடிக்க விஜய் மற்றும் கார்த்தியிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதால் விக்ரமின் அடுத்தடுத்த பாகங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் படத்தின் வெற்றியால் கமல்ஹாசன் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். சூர்யாவிற்கு ரோலக்ஸ் கைக்கடிகாரத்தையும், லோகேஷ் கனகராஜூற்கு காரையும் அன்பளிப்பாக வழங்கியள்ளார். மேலும், விக்ரம் படக்குழுவினர் அனைவருக்கும் பைக்குகள் அன்பளிப்பாக வழங்கியும் அசத்தியுள்ளனர்.