Indian 2 Box Office : மூன்றே நாளில் மகாராஜா படத்தின் வசூலை முறியடித்த கமல்...இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் 3 நாட்களில் உலகளவில் 100 கோடி வசூல் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இந்தியன் 2 கடந்த ஜூலை 12 ஆம் தேதி வெளியானது. சித்தார்த் , ரகுல் ப்ரீத் , சமுத்திரகனி , பிரியா பவாணி சங்கர் , பாபி சிம்ஹா , விவேக் , மனோபாலா , மாரிமுத்து , நெடுமுடி வேனு , ஜகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
விமர்சனங்களை வெல்லும் வசூல்
இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 3 மணி நேரம் படத்தின் நீளம் பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துவதாக கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் நீளத்தை 20 நிமிடங்கள் படக்குழு குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமர்சனங்கள் ஒருபக்கம் இந்தாலும் இந்தியன் 2 திரைபப்டம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. க்ளைமேக்ஸில் வரும் இந்தியன் 3 படத்தின் முன்னோட்டமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தியன் 2 படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
3 நாட்களில் 100 கோடி
பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை வெளியிடும் சாக்னிக் தளம் இந்தியன் 2 படத்தின் வசூல் நிலவரங்களை வெளியிட்டு வருகிறது. இந்த தளத்தில் குறிப்பிட்டுள்ளது படி இந்தியன் 2 திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியளவில் ரூ 25.6 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது நாளில் 18.2 கோடியும். மூன்றாவது நாளில் 15.3 கோடி வசூலித்துள்ளது.
Box Office: #Indian2 Becomes Highest-Grossing Tamil Movie of 2024, Beating #Maharaja In 3 Dayshttps://t.co/1ibUy1s32M
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) July 15, 2024
உலகளவில் மூன்று நாட்களில் இந்தியன் 2 படம் 109.15 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக படக்குழு சார்பாக அதிகாரப் பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் உலகளவில் 105 கோடி வசூல் எடுத்திருந்த நிலையில் மூன்றே நாட்களில் மகாராஜா படத்தின் வசூலை முறியடித்து இந்த ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக மாறியுள்ளது இந்தியன் 2. இந்தியன் 2 மிகப்பெரிய பான் இந்திய வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க : HBD Anu Hasan : ஜாலியான பர்சனாலிட்டி... 'காஃபி வித் அனு' நாயகி அனு ஹாசன் பிறந்தநாள் இன்று!
20% சலுகையில் மசாஜ் - அழகு நிலையத்தின் அதிரடி அறிவிப்பு - ஆனால் ஒரு கண்டிஷன்!