Vikram Audio & Trailer: 'விக்ரம்' படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!
விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது
கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.
Firing up your playlists with @anirudhofficial 's explosive tracks for Vikram From May 15.#VikramAudioLaunch#KamalHaasan #VikramFromJune3 @ikamalhaasan @Udhaystalin @Dir_Lokesh @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @turmericmediaTM @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/lev9P9MWDr
— Raaj Kamal Films International (@RKFI) May 2, 2022
இந்த நிலையில், விக்ரம் படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக செய்ய படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மே 15ம் தேதி விக்ரம் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடத்தப்படுமா அப்படி நடந்தால் இந்தியாவில் நடக்குமா அல்லது வெளிநாடா என பல எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வருகிற மே 18-ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவிலும் திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Glad to announce the launch of Vikram NFTs and Trailer at Cannes Film festival in association with Vistaverse and Lotus Meta Entertainment!
— Raaj Kamal Films International (@RKFI) April 25, 2022
#KamalHaasan #Vikram #VikramFromJune3 #VikraminVistaverse #Cannes2022 #VikraminCannes pic.twitter.com/1Dan1RnQRR
முன்னதாக விக்ரம் படத்தில் ப்ரமோஷன் வேலைகளை படக்குழு தொடங்கிவிட்டது. இந்தியாவில் முக்கியப் பாதைகளில் செல்லும் ரயில்களில் விக்ரம் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்