மேலும் அறிய

Kamal Haasan: ப்ரேமம் இயக்குநருக்கு குரலால் தெம்பூட்டிய கமல்ஹாசன்.. அன்புக்கு தூது சென்ற நடிகர் பார்த்திபன்!

அப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு கமல்ஹாசன் தெம்பூட்டியதாக பார்த்திபன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகர் பார்த்திபன் மூலம் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் வாழ்த்து தெரிவித்திருப்பதும், அவரது வாழ்த்துக்கு கமல்ஹாசன் பதில் அளித்திருப்பதுமான ஆடியோ ஒன்று வெளியாகி தமிழ், மலையாள சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

பிரேமம் இயக்குநரின் உடல்நிலை

‘பிரேமம்’ எனும் ஒற்றைப் படம் மூலம் மலையாள சினிமா தாண்டி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்று கொண்டாடப்பட்டு வருபவர் அல்ஃபோன்ஸ் புத்திரன். ப்ரேமம் படத்துக்குப் பிறகு வெளியான அவரது கோல்டு, கிஃப்ட் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.

தற்போது சாண்டி மாஸ்டர் நடிக்க கிஃப்ட் எனும் படத்தை அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கி வருகிறார். இளையராஜா இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தன் உடல்நலப் பிரச்னை காரணமாக தான் சினிமாவில் இருந்து விலகுவதாக சென்ற மாதம் அறிவித்து தன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தன் பதிவை அல்ஃபோன்ஸ் புத்திரன் நீக்கிய நிலையில், அவர் மன அழுத்தத்தில் இருப்பதாக நெருங்கிய வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.

Kamal Haasan: ப்ரேமம் இயக்குநருக்கு குரலால் தெம்பூட்டிய கமல்ஹாசன்.. அன்புக்கு தூது சென்ற நடிகர் பார்த்திபன்!

கமல்ஹாசன் ரசிகர்

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனின் தீவிர விசிறியான அல்ஃபோன்ஸ் புத்திரன் திரைத்துறையினர் பலர் மூலமாக முயன்று இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மூலம் நடிகர் கமல்ஹாசனுக்கு தன் பிறந்தநாள் வாழ்த்தினை கொண்டு சேர்த்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 7ஆம் தேதி தன் பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், அல்ஃபோன்ஸ் புத்திரனின் வாழ்த்து செய்திக்கு தற்போது வாய்ஸ் நோட் மூலம் பதிலளித்துள்ளார். 

‘மனசு நல்லா இருக்கு'

“அல்ஃபோன்ஸ் புத்திரனின் பாட்டு கேட்டேன். அவர் உடம்பு சரியில்லனு சொன்னீங்க. ஆனா மனசு நல்லா இருக்கு. குரல் சந்தோஷமா இருக்கு. அப்படியே இருக்கட்டும். அவர் எடுக்கற முடிவு அவருடையது என்றாலும் உடம்ப நல்லா பாத்துக்க சொல்லுங்க. வாழ்த்துகள். டேக் கேர் அல்ஃபோன்ஸ்”  என கமல் பேசியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் தன் இன்ஸ்டா ஸ்டோரியில் அல்ஃபோன்ஸ் புத்திரன் பகிர்ந்துள்ளார்.

இதேபோல், அல்ஃபோன்ஸூக்கு கமல் அளித்த பதிலை தன் சமூக வலைதளங்களில் நடிகர் பார்த்திபனும் பகிர்ந்துள்ளார்.

பார்த்திபன் பகிர்ந்த பதிவு

“பெரிதோ சிறிதோ விருதே கிடைத்தாலும்,என் பிறந்த நாள் பரிசாக நான் நினைப்பது இக்குரலை தான். கேட்கும் மாத்திரத்தில் புரியாது… புதிய பாதைக்கு முன் நாகரீகமாக யாசகமே பலரிடம் கேட்டிருக்கிறேன்.அதன் பின் அருள் பாவிக்கும் ரசிகர்களாகிய உங்களின் ஆதரவால் நான் யாரிடமும் எனக்காக எதையும் கேட்பதில்லை.

ஆனால் மற்றவர்களுக்காக நிறைய கேட்டிருக்கிறேன். அப்படி மலையாள ‘ப்ரேமம்’ செய்த இயக்குனர் 
அல்ஃபோன்ஸ் புத்திரன், கமல் சார் பிறந்த நாளுக்கு பரிசாக பாடல் தொகுப்பு ஒன்றை தன் குரலில் பதிவு செய்து எனக்கனுப்பி “எல்லா வழியிலும் முயற்சித்து விட்டேன்,நீங்கள் அவரிடம் சேர்ப்பிக்க இயலுமா?” என்றார்.

தெம்பூட்டிய கமல்

அவருக்குதவ கமல் சாரை அணுகினேன். அதற்கு அவர் அளித்த பதிலது. வரிசை கட்டிக்கொண்டு படங்கள், சொந்தப் பட வேலைகள், பிக் பாஸ், அரசியல் பணிகள், இப்படி, அப்படி நகர முடியா நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில் தன் குரல் மூலம் ஒரு கலைஞருக்கு தெம்பு, டானிக். அதுவும் துரிதமாக அனுப்பியவருக்கு வார்த்தைகள் அற்ற மவுனத்தை ( நேற்றானதால்) மனப்பூர்வமாக பகிர்ந்தேன்.

அதைக் கேட்டு பெட்டி பெட்டியாக இயக்குநர் எனக்கு நன்றி அனுப்பினார். உடல் நலம் காரணமாக மனநலமும் குன்றியுள்ள ஒருவருக்கு ஒரு சொட்டு மருந்தாக நான் பயன்பட்டதால், வாழ்வின் ஒரு துளி அர்த்தப்பட்டது. இதைச் சொல்லக் காரணம் out of the way போய் கூட அடுத்தவரின் புன்னகைக்கு காரணமாகலாம்” என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன், நடிகர் கமல்ஹாசன், நடிகர் பார்த்திபன் ஆகியோருக்கு இடையேயான இந்த நிகழ்வு இணையவாசிகளின் இதயங்களை வென்று லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
LIC Scholarships: படித்து முடிக்கும்வரை அனைத்து துறை மாணவர்களுக்கும் உதவித்தொகை: எல்ஐசி அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
மோடியைச் சந்தித்த இலங்கை அதிபர்! இனியாவது தமிழக மீனவர்களுக்கு விடிவு பிறக்குமா?
Embed widget