Kamal Haasan: இந்தியன் 2 படத்திற்காக 22 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் கமல்.. வைரலாகும் புகைப்படம்..!
இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து அப்டேட்டுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து அப்டேட்டுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஷங்கர் - கமல் கூட்டணி
பிரமாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் இயக்குநர் ஷங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டு இயக்கிய படம் “இந்தியன்”. கமல்ஹாசன் தந்தை மற்றும் மகன் என இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கஸ்தூரி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் ஒளிபரப்பான படம் என்ற பெருமையையும் இந்தியன் படம் பெற்றது.
இதற்கிடையில் இப்படத்தின் 2 ஆம் பாகம் கேட்டு ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவித்தது.
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் , பாபி சிம்ஹா,பஞ்சாபி நடிகர் யோக்ராஜ் சிங், காளிதாஸ் ஜெயராம் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள்
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு சமுத்திரகனி, பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், ஜி.மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர் ஆகிய 7 வொல்லன்கள் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக சில தினங்களுக்கு முன் தைவானில் நடந்த படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். கமலும் தைவானில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்தியன் 2 படத்தில் 90 வயதுடையவராக நடிக்கும் கமலுக்கு பல மணி நேரங்கள் சிறப்பு மேக்கப் போடப்படுகிறது. அதேபோல் அவர் மனைவியாக நடிக்கும் காஜலின் மேக்கப்பிற்காக மட்டும் கிட்டதட்ட மூன்றரை மணி நேரம் ஆவதாகவும், இது நிச்சயம் காஜல் தான் என கண்டுபிடிக்க முடியாத அளவில் இருக்குமெனவும் தகவல் வெளியாகியிருந்தது.
இன்றைய தினம் இந்தியன் 2 படம் ரிலீஸ் குறித்த தகவல் முதலில் வெளியானது. அதன்படி இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து கமல் பொருள் ஒன்றில் கமல் மிருதங்கம் வாசிக்கும் வீடியோவை வெளியிட்டார். இந்நிலையில் கமல் 22 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் #Indian2 ஹேஸ்டேக் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் படிக்க: Indian 2: விக்ரம் படத்தை தொடர்ந்து "இந்தியன் -2” படத்தில் கமலுடன் இணைந்த முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி