மேலும் அறிய

மல்டி ஸ்டாரர் படங்கள்தான் டார்கெட்.. மம்முட்டியுடன் இணையும் விஜய்சேதுபதி.. ஷூட்டிங் எப்போது?

காக்க முட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் ஜோடி சேர உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ என்றால் அவர் இப்படி தான் இருக்க வேண்டும் என தொன்றுதொட்டு பின்பற்றி வந்த ஃபார்முலாவை தகர்த்து எறிந்த ஒரு நடிகர் விஜய் சேதுபதி. ஒரு முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதியின் டார்கெட் தற்போது மல்டி ஸ்டாரர் படங்களில் நடிப்பதாக மாறியுள்ளது.

சமீப காலமாக மல்டி ஸ்டாரர் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் என சினிமா உலகின் டாப் ஹீரோக்களின் படங்களில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில், அனைவரையும் மிஞ்சி வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதி, அடுத்ததாக ஜோடி சேர போவது மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டியுடன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

 

மல்டி ஸ்டாரர் படங்கள்தான் டார்கெட்.. மம்முட்டியுடன் இணையும் விஜய்சேதுபதி.. ஷூட்டிங் எப்போது?

ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் டு மக்கள் செல்வன் :

ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களின் படங்களில் ஆங்காங்கே எட்டி பார்த்தவரா இன்று அனைத்து மொழி படங்களிலும் கலக்கி வரும் ஹீரோ என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அபாரமான வளர்ச்சி. ஆனால் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் கடுமையான உழைப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. இவர் மல்டி ஸ்டாரர் படங்களில் நடிக்கும் போது மற்ற ஹீரோக்களுடனான இவரது காம்போ தூள் பறக்கிறது. அதே சமயம் தனது கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்டுவதில் கை தேர்ந்தவராக வலம் வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மாமனிதன், காத்து வாக்குல ரெண்டு காதல், விக்ரம் என மூன்று படங்களிலுமே வெரைட்டியான கதாபாத்திரத்தில் தெறிக்க விட்டு இருந்தார். மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. 

 

 

அடி தூள் காம்போ :

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தர்பார், உலகநாயன் கமல்ஹாசனுடன் விக்ரம், இளைய தளபதி விஜயுடன் மாஸ்டர், பாலிவுட் கிங் கான் ஷாருக்கானுடன் ஜவான் என அடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் இந்த ஹீரோ தான் தனக்கு வில்லனாக வர வேண்டும் என அடம் பிடித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக மலையாள மெகா ஸ்டாருடன் ஜோடி சேர உள்ளார் விஜய் சேதுபதி. 

உடனடியாக தொடங்கும் படப்பிடிப்பு :

மலையாள ரசிகர்கள் மெகா ஸ்டார் என கொண்டாடி வரும் நடிகர் மம்மூட்டி இதுவரையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்மூட்டி - விஜய் சேதுபதி காம்போவில் உருவாகவிருக்கும் படத்தினை இயக்க உள்ளார் சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக அமைந்த "காக்க முட்டை" படத்தை இயக்கிய மணிகண்டன். இப்படத்தின் படப்பிடிப்பு உடனடியாக இந்த மாதமே தொடங்கவுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

படத்திற்கு ஏற்ற லொகேஷன் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு டாப் ஸ்டார்களின் கால்ஷீட்டும் தயாராக உள்ளன என்பதால் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடிக்க உள்ளாராம் இயக்குனர் மணிகண்டன். படத்தின் ஷூட்டிங் நடைபெறும் போதே, படம் குறித்த மற்ற அப்டேட்களும் வெளியாகும் என கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget