Kajal Aggarwal: 'எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்..' அன்பு மகனின் போட்டோவை பகிர்ந்து தாய்மை மகிழ்ந்த காஜல்!
Kajal Aggarwal: தனது மகன் ஃபோட்டோவை முதன் முதலாக பகிர்ந்து காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு!
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் காஜல் அகர்வால். கடந்த ஏப்ரலில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் கிச்சுலு என்று பெயர் சூட்டினர்.
இந்நிலையில், காஜல் அகர்வால் தனது குழந்தையின் படத்தை முதன்முறையாக சமூக ஊடகங்களில் பகிந்துள்ளார். ரசிகர்கள் மகிழ்ச்சியில் தங்களது வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
View this post on Instagram
என் வாழ்வின் காதல் நீ என தனது இன்ஸ்டாகிராமில் மகனின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியிலும் வெற்றிக்கொடிக் கட்டிய காஜல் அகர்வால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் காதலித்து வந்த மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
View this post on Instagram
கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மகனுடன் இருக்கும் க்யூட் போட்டோ ஒன்றையும் ஷேர் செய்திருந்தார். நீ ஒன்றை எப்போதும் மறந்துவிடாதே! நீ எனக்கு, ’You are my sun, my moon, and all my stars, little one. ’”
என்று குறிப்பிட்டு அன்னையர் தின வாழ்த்துகளை கூறியிருந்தார்.
இப்போது தனது மகனின் புகைப்படத்தை முதன் முதலாக பகிர்ந்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்