Kajal Aggarwal: குழந்தை பிறப்புக்கு பிறகான நேரம் சினிமாவில் காட்டப்படுவது போலானது அல்ல.. ஆனால் அழகானது - காஜல்
காஜல் அகர்வால், ஓர் தாயாக தன் பயணம் குறித்து நெகிழ்ச்சியான அனுபவங்களைப் பகிந்துள்ளார்.
பிரபல நடிகை காஜல் அகவர்வால் - கௌதம் கிச்சுலு இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இருவரும் தங்களுடைய மகனுக்கு 'நீல் கிச்சுலு' எனப் பெயரிட்டனர். காஜல், தான் தாயான அனுபவத்தையும், குழந்தைப் பேறுகாலம் மற்றும் தன் மகனுடனான நாட்களின் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
தாயாகியிருக்கும் காஜல் அகர்வால், தனது இன்ஸ்கிராம் பதிவில், ”என் குழந்தை நீலை இந்த உலகிற்கு வரவேற்பதில் அவ்வளவு உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைகிறேன். ஓர் தாயாக, பெற்றோராக, இந்த பிரசவ அனுபவம் மகிழ்ச்சியையும், இன்னல்களும் சேர்ந்ததுதான் என்றாலும், இந்தப் பயணம் மிகவும் அற்புதமானது. மிகவும் திருப்திகரமான அனுபவம்! நீல் பிறந்த சில நொடிகளில், அவனை அப்படியே,அந்த ஈரத்துடன், நச்சுக்கொடியுடன் என் மார்பில் பிடித்துக் கொண்டபோது எழுந்த உணர்வை வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. அந்த ஒரு கணம் எனக்கு அன்பின் ஆழமான திறனைப் புரியவைத்தது; இந்த வாழ்க்கை மீதான நன்றியுணர்வை எனக்கு ஏற்படுத்தியது.மேலும், என்றென்றும் எனக்கு இருக்கும் பொறுப்பை உணர்த்தியது.
இந்தப் பயணம் நிச்சயமாக எளிதானதாக இல்லை. நான் மூன்று தூக்கமில்லாத இரவுகளைச் சந்தித்திருக்கிறேன். அதிகாலையில் இரத்தப் போக்கு; பதற்றம், கவலை, ஸ்ரேச்டு ஸ்கின், ஃப்ரோஷன் பேட்ஸ் என மனச்சோர்வுடந்தான் அமைந்தது. ஆனால், எங்களுக்குள்ளான அதிகாலையில் இனிமையான அரவணைப்புகள், நம்பிக்கையை ஏற்படுத்தும் பார்வை பகிர்வுகள், சிறிய முத்தங்கள், அமைதியான தருணங்கள். ஒருவருக்கொருவர் இந்த அற்புதமான பயணத்தை ஒன்றாக சேர்ந்து நடக்கிறோம். நிறைய கற்றுக்கொள்கிறோம். வளர்கிறோம். குழந்தைப் பேறிற்கு பிற்பட்ட காலம் சினிமாவில் காட்டப்படுவதைப் போன்றது இல்லை, ஆனால், நிச்சயம் அழகானதாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.