Serial to Cinema: கன்னட சினிமாவில் எண்ட்ரி தரும் மற்றொரு சின்னத்திரை நடிகை... சீரியலில் இருந்து விலகலா?
ப்ரியங்கா குமாருக்கு கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என செய்தி வந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக செய்தி பரவியது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது “காற்றுக்கென்ன வேலி” சீரியல். இந்த சீரியலில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் ப்ரியங்கா குமார், சீரியலில் இருந்து சினிமாவுக்கு ப்ரொமோட் ஆகியிருக்கிறார். இனி சினிமாவிலும் நடிக்க இருப்பதால், சீரியலில் இருந்து விடை பெறுகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ப்ரியங்கா குமாருக்கு கன்னட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என செய்தி வந்த நிலையில் அவர் சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக செய்தி பரவியது. ஆனால் தற்போது அதை மறுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் ப்ரியங்கா. அதில் தான் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகவில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அது மட்டுமின்றி, சீரியலிலும், சினிமாவிலும் அவர் மாறி மாறி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
View this post on Instagram
முன்னதாக, காற்றுக்கென்ன வேலி சீரியலில் நாயகனாக நடித்து வந்த தர்ஷன் திடீரென அத்தொடரிலிருந்து விலகினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அவருக்கு பதில் சுவாமிநாதன் என்ற கன்னட நடிகர் நடித்து வருகிறார். தவிர, ஹீரோவுக்கு அம்மாவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாளவிகா அவினாஷும் மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹீரோயினும் மாற்றப்பட இருக்கிறார் என்ற செய்தி அந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சினிமாவில் நடிக்க இருப்பதால் சீரியலில் இருந்து விலகப்போவதில்லை என்பதை அவர் உறுதி செய்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















