July Movie Release: பாக்கெட்டுல காசு இருக்கா? ஜுலையில் வெளியாகப்போகும் முக்கிய படங்களின் பட்டியல் இதோ..!
July Movie Release: ஜுலை மாதத்தில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக உள்ள தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த முக்கிய திரைப்படங்களை இங்கு அறியலாம்.

ஜுலை மாதத்தில் அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியாக உள்ள தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சேர்ந்த முக்கிய திரைப்படங்களை இங்கு அறியலாம்.
சினிமா எனும் பொழுதுபோக்கு..!
அன்றாட வாழ்வில் நிற்க கூட நேரமெடுக்காமல் ஓடி உழைத்துக் கொண்டிருக்கும், மனித சமூகத்திற்கான பொழுதுபோக்குகளில் சினிமாவும் இன்றியமையாதது. அதனால் தான், சம்பளம் வந்த உடனேயே பட்ஜெட் போடும் நடுத்தர குடும்பத்தினர் கூட, ஒவ்வொரு மாதமும் சினிமாவிற்கு என ஒரு தொகையை தவறாமல் ஒதுக்கிவைத்து விடுகின்றனர். அந்த வகையில் ஜுலை மாதத்திற்கு என நீங்கள் ஒதுக்கிய பணத்தை செலவு செய்வதற்கான சரியான படங்களின் பட்டியலை இங்கே வழங்கியுள்ளோம்.
மாவீரன்:
ஜுலை மாதத்தின் முக்கிய படங்களின் வெளியீடு என்பது இரண்டாவது வாரத்தில் தான் தொடங்குகிறது. அதில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன். தேசிய விருது வென்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஜுன் 14ம் தெதி வெளியாகியுள்ளது. பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர் மற்றும் சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் சரியாக ஓடாததால், வெற்றிக்காக இந்த படத்தை அவர் மிகவும் நம்பியுள்ளார்.
மிஷன் இம்பாசிபள் 7:
டாம் க்ரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபள் பிரான்சைஸின் 7 ஆம் பாகம் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. வருகின்ற ஜூலை மாதம் 14 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாவுள்ளது. Dead Reckoning என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. ஏற்கனவே இதற்கான டிரெய்லர் வெளியாகி உலகளாவிய ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஒப்பன்ஹெய்மர்:
உலகளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரான க்ரிஸ்டோஃப்ர் நோலன், அணு ஆயுதத்தை முதல் முதலில் கண்டுபிடித்தவரான ஒப்பன்ஹேய்மரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கியுள்ளார். இப்படம் வருகின்ற ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது. சிலியன் மர்பி, ராபர் டோனி ஜுனியர் மற்றும் எமிலி பிளண்ட் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ள நிலையில், பல பிரமாண்ட காட்சிகள் கிராபிக்ஸை பயன்படுத்தாமல் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.
பார்பி:
ஹாலிவுட் இயக்குநர் க்ரெட்டா கெர்விக் இயக்கியுள்ள திரைப்படம் பார்பி. குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரம் பார்பி. அந்த கதாபாத்திரத்தில் மார்க்ரெட் ராபி நடித்துள்ள இப்படம் வருகின்ற ஜூலை 21 அன்று வெளியாகவுள்ளது.
கொலை:
பிச்சைக்காரன் 2 படம் கொடுத்த வெற்றியை தொடர்ந்து, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த கொலை திரைப்படம் வரும் 21ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரோ:
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'வினோதய சித்தம்'. இந்த திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ப்ரோ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற ஜூலை 28 வெளியாகவுள்ளது.
மார்க் ஆண்டனி:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்க் ஆண்டனி’. போன் வழியாக காலத்தை கடந்து செல்லும் டைம் டிராவல் நிகழ்வுகளே இப்படத்தின் கதை. இப்படம் வருகின்ற ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

