மேலும் அறிய

Junior NTR Vetrimaaran : ஜூனியர் என்.டி.ஆரும், வெற்றிமாறனும் இணையும் பான் இந்தியத் திரைப்படம்? - புதிய தகவல்கள்!

சமீபத்தில், தமிழ் இயக்குநர் வெற்றிமாறனின் பான் இந்தியத் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீபத்தில் `ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் பெரு வெற்றிக்குப் பிறகு, தொடர்ந்து பல்வேறு முன்னணி படங்களில் களமிறங்கி வருகிறார் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். அடுத்தடுத்து பெரிய இயக்குநர்கள் கொரடாலா சிவா, பிரஷாந்த் நீல் முதலானோருடன் இணைந்துள்ள ஜூனியர் என்.டி.ஆரின் அடுத்தகட்ட அப்டேட்கள் சமூக வலைத்தளங்களில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில், தமிழ் இயக்குநர் வெற்றிமாறனின் பான் இந்தியத் திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீபத்திய தகவல்களின்படி, ஜூனியர் என்.டி.ஆர் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அவரது அடுத்தடுத்த படங்கள் முடிவடைந்த பிறகு, இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் ஜூனியர் என்.டி.ஆரிடம் கூறிய கதையில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. `கே.ஜி.எஃப்’ திரைப்படங்களை இயக்கிய பிரஷாந்த் நீல் உருவாக்கத்தில் வெளிவரும் `NTR31' படப்பிடிப்புப் பணிகள் முடிந்தவுடன், இயக்குநர் வெற்றிமாறனின் படப்பிடிப்பில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை. 

Junior NTR Vetrimaaran : ஜூனியர் என்.டி.ஆரும், வெற்றிமாறனும் இணையும் பான் இந்தியத் திரைப்படம்? - புதிய தகவல்கள்!

தென்னிந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களுள் ஒருவரான வெற்றிமாறனின் திரைப்பயணம் பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்ட திரைப்படங்களைக் கொண்டது. இதுவரை தோல்வியடையாத திரைப்படங்களையே உருவாக்கி வந்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். `ஆடுகளம்’, `விசாரணை’, `அசுரன்’, வடசென்னை’ முதலான அவரது திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. 

View this post on Instagram
 
A post shared by Jr NTR (@jrntr)

`NTR30' என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள படத்தில் நடித்து வருவதில் பிஸியாக இருக்கிறார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். கமர்சியல் ஆக்‌ஷன் பொழுதுபோக்குத் திரைப்படமாகக் கருதப்படும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கு அடுத்ததாக இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைகிறார் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். 

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் இணைந்து `விடுதலை’, ஜல்லிக்கட்டு பற்றி நடிகர் சூர்யாவுடன் `வாடிவாசல்’ முதலான திரைப்படங்களை இயக்கி வருகிறார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget