Josh Artist: ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்.. எடிசன் விருது வழங்கும் விழாவில் அசத்திய ஜோஷ் கலைஞர்கள்...!
பிரபல எடிசன் விருது வழங்கும் விழாவில் ஜோஷ் செயலி மூலம் பிரபலமான கலைஞர்கள் நடத்திய இசை நிகழ்ச்சி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவில் உள்ள செயலிகளில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்று ஜோஷ் ஆப். இந்த செயலியானது சிறிய வீடியோக்கள் தளமாக விளங்குகிறது. நாடு முழுவதும் இந்த செயலியை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த செயலி மூலமாக திறமைமிக்க இசைக் கலைஞர்கள் திறமை வெளி உலகத்தின் வெளிச்சத்திற்கு வருகிறது.
எடிசன் விருதுகள்:
ஜோஷ் செயலியில் பாடல் எழுதுபவர்கள், இசையமைப்பாளர்கள், ரேப் இசை கலைஞர்கள் என பலரது திறமையும் இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற எடிசன் விருது வழங்கும் விழாவை அவர்களுடன் இணைந்து ஜோஷ் செயலியும் இணைந்து நடத்தியது. இந்த விருது வழங்கும் விழாவில் ஜோஷ் செயலியை பயன்படுத்தி பிரபலமான கலைஞர்களுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
கடந்த 7ந் தேதி எடிசன் விருது வழங்கும் விழாவில் இவர்கள் தங்களது அற்புதமான திறமையை வெளிக்காட்டினர். தமிழ் பொழுதுபோக்கு துறையில் சிறந்த கலைஞர்களுக்கு ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் தேர்வாகும் கலைஞர்களுக்கு இந்த எடிசன் விருது வழங்கும் விழாவில் எடிசன் விருதுகள் வழங்கப்படுகிறது.
ஜோஷ் கலைஞர்கள்:
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் பிரநிதி பிரவீன்குமார், சாய்கிருஷ்ணன் சுந்தரம், பாடலாசிரியரும், பாடகருமான ரிதின் சாமுவேல், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்திய மோனிஷா ரத்தினவேலு, சிறந்த பியானோ கலைஞர் ஆல்வின் ப்ரூனோ, அஸ்வத், அனிருத் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று அசத்தினர்.
எடிசன் விருது வழங்கும் விழா இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 5.4 மில்லியன் லைக்ஸ்களை பெற்றுள்ளது. எடிசன் விருத வழங்கும் நிகழ்ச்சியில் பிரபல நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டனர். இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, நடிகர்கள் கிங்ஸ்லி, ஜிபி முத்து ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





















