BoxOffice Collection: ஏறுமுகத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. இறங்குமுகத்தில் ஜப்பான்.. ஆறாம் நாளில் வசூல் எப்படி?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ராஜூ முருகன் இயக்கிய ஜப்பான் இரண்டு படங்களும் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கார்த்தி நடிப்பில் ராஜூ முருகன், விக்ரம் பிரபு நடித்துள்ள ரெய்டு, கிடா, தி மார்வெல்ஸ், டைகர் 3 ஆகிய படங்கள் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றன.
இவற்றில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகின. ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25ஆவது படமாக ஜப்பான் உருவாகியிருந்த நிலையில், கோலிவுட்டின் ட்ரெண்ட் செட்டர் படங்களுள் ஒன்றான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றொருபுறம் எதிர்பார்ப்புகளைக் கூட்டியது.
இந்நிலையில் வெளியானது முதல் ஜிகர்தண்டா திரைப்படம் பாசிட்டிவ் ரிவ்யூக்களையும், ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. மற்றொருபுறம் இந்த இரண்டு படங்களின் 5 நாள் வசூல் குறித்த பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை sacnilk தளம் பகிர்ந்துள்ளது.
முதல் நாள் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் பெரும் வரவேற்புடன் தொடங்கி அடுத்தடுத்த நாள்களில் சரிவை சந்தித்துள்ளது. இதற்கு மாறாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மந்தமாகத் தொடங்கி அடுத்தடுத்த நாள்களில் பாசிட்டிவ் ரிவ்யூக்களைப் பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
ஜிகர்தண்டா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியான நிலையில், மூன்று மொழிகளிலும் சேர்த்து முதல் நாள் 2.96 கோடிகளையும், இரண்டாம் நாள் 5.21 கோடிகளையும், மூன்றாம் நாள் 7.4 கோடிகளையும், நான்காம் நாள் 7.25 கோடிகளையும், ஐந்தாம் நாளான நேற்று 3.4 கோடிகளையும் வசூலித்துள்ளது. மொத்தம் ரூ. 26.22 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.
*Jigarthanda Double X Day 6 Morning Occupancy: 15.23% (Tamil) (2D) #JigarthandaDoubleX https://t.co/f2zcSuRmKR*
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) November 15, 2023
இதேபோல், ஜப்பான் திரைப்படம் தமிழ், தெலுங்கு, என இரண்டு மொழிகளிலும் சேர்த்து முதல் நாள் 4.15 கோடிகளையும், இரண்டாம் நாள் 2.85 கோடிகளையும், மூன்றாம் நாள் 3.9 கோடிகளையும், நான்காம் நாள் 3.05 கோடிகளையும், ஐந்தாம் நாளான நேற்று 1.4 கோடிகளையும் வசூலித்துள்ளது. மொத்தம் ரூ. 15.35 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.
நேற்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்து ரசித்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியது கவனமீர்த்தது.
ஜிகர்தண்டா XX படம் குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு.சினிமா ரசிகர்கள் இதுவரைக்கும் பார்க்காத புதுமையான காட்சிகள்.
லாரன்ஸால் இப்படியும் நடிக்க முடியுமா என்ற பிரமிப்பை படம் நமக்கு உண்டாக்குகிறது, எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரை உலக நடிகவேள். வில்லதனம், நகைச்சுவை, குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் மக்களை கைதட்ட வைக்கிறார், பிரமிக்க வைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழவும் வைக்கிறார்” என ரஜினி பாராட்டி இருந்தார்.
மேலும் படிக்க: Diretor RA Venkat: “மொத்தமா டிக்கெட் வாங்கறதா சொல்லியும் ஷோ போடல” : கிடா பட இயக்குநர் வேதனை..