Jawan Release Highlights : களைகட்டிய ஜவான் கொண்டாட்டம்... திரையரங்கை திருவிழாவாக்கும் ரசிகர்கள்..!
Jawan Release LIVE: ஜவான் திரைப்படம் வெளியிட்டை முன்னிட்டு படம் தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
Jawan Release LIVE Updates:
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிபய திரைப்படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குனராக உருவெடுத்தவர் அட்லீ. இவர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் உலகெங்கிலும் நாளை ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஜவான் திரைப்படத்திற்கு மட்டும் முதல் நாளிலே சுமார் 2 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. உலகெங்கிலும் பல நாடுகளில் வெளியாகியுள்ள ஜவான் திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதால் முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கானுக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான பதான் படம் மாபெரும் வெற்றியை பெற்றதால் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் தமிழ்நாட்டில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தில் நடிகர் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏற்கனவே படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,
இந்த நிலையில், நாளை ஜவான் படம் ரிலீசாக இருப்பதால் இன்று முதல் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை, ரசிகர்கள் கூட்டம் படு ஜோராக உள்ளது.
Jawan Release LIVE : ஜவான் படத்தின் முழு விமர்சனம் இங்கே!
ஜவான் படத்தின் முழு விமர்சனத்தை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும் : Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!
Jawan Release LIVE : திரையரங்கு வாசலில் சாகசம் செய்யும் ஷாருக் ரசிகர்கள்!
கட்-அவுட் உயரத்திற்கு மனித பிரமிடை உருவாக்கி, கொடி அசைத்த ஷாருக் ரசிகர்கள்.
Jawan Release LIVE : வேட்டு வெடித்து மேளம் அடித்து கொண்டாட்டம்..
Jawan Release LIVE : இன்று ஹோலி பண்டிகையா?
ஜவான் ரிலீஸையொட்டி, திரையரங்கின் வாசலில், வண்ணப்பொடிகளுடன் ஹோலி பண்டிகை போல் கொண்டாடிய ரசிகர்கள்
Jawan Release LIVE : வைரலாகும் ஷாருக்கானின் மினி வெர்ஷன் கேக்!
ஜவான் படத்தின் ரிலீஸையொட்டி, ஷாருக்கானின் ரசிகர்கள் ஸ்பெஷல் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்