Nayanthara - Samantha : இந்தியிலும் நயன்தாராவுக்கு போட்டியான சமந்தா...! "ஜவான்"ல ஜஸ்ட்ல மிஸ்..!
அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடிக்க முதலில் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Nayanthara - Samantha : இந்தியிலும் நயன்தாராவுக்கு போட்டியான சமந்தா...! jawan movie team first approch female lead role to samantha for nayanthara role Nayanthara - Samantha : இந்தியிலும் நயன்தாராவுக்கு போட்டியான சமந்தா...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/04/b0acfaf157ccacb94d5898862d29a27a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் அட்லீ. இவர் தமிழில் கடைசியாக விஜயை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கிய பிறகு இந்தியில் ஷாரூக்கானுடன் படம் இயக்கச் சென்றுவிட்டார். ஜவான் என்று இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகியது. அடிபட்ட வீரனாக பயங்கரமான ஆயுதங்களுடன் கட்டுப்பாட்டு அறையில் முகம் முழுவுதும் காயத்திற்கு கட்டுபோடப்பட்டிருப்பது போன்று ஷாரூக்கான் டீசரில் காட்சி தருகிறார். இந்த படத்தில் ஷாரூக்கானின் ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.
இந்த நிலையில், ஜவான் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஜவான் படத்தில் நடிகர் ஷாரூக்கானுக்கு ஜோடியாக முதலில் நடிக்க சமந்தாவிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அப்போது சமந்தா பல்வேறு சொந்த விவகாரங்கள் காரணமாக தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதையடுத்தே நயன்தாராவிடம் கால்ஷீட் பெறப்பட்டது.
இயக்குனர் அட்லீ இந்தியில் இயக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு முதலில் சங்கி என்று பெயர் வைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாராணி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அட்லீ பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என்று ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
விஜய்யின் 67வது படத்தை அட்லீ இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாராவும், சமந்தாவும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா படத்தில் இடம்பெற்ற ம்ம்ம் சொல்றியா... ம்மம் சொல்றியா பாடல் மூலமாக இந்தியா முழுவதும் சமந்தா மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். அவர் தற்போது குஷி என்ற தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமந்தாவின் மார்க்கெட் கிடுகிடுவென தமிழ், தெலுங்கு என அனைத்து திசைகளிலும் இருப்பதால் ஜவானில் சமந்தா நடிக்காதது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றமாகவே இருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் லேடி சூப்பர்ஸ்டாருக்கும் நல்ல செல்வாக்கு இருப்பதால் அவர் அதை ஈடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாகசைதன்யாவை விவகாரத்து செய்த பிறகு நடிகை சமந்தா முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் கதீஜா கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)