Javed Akhtar: எந்த மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என்பது இயக்குநர்களின் முடிவு - ஜாவேத் அக்தர்
78 வயதான ஜாவேத் அக்பர் பாடலாசிரியர்,எழுத்தாளராக இந்திய சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
எந்த மாதிரியான படங்களை எடுக்க வேண்டும் என இயக்குநர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என பழம்பெரும் பாடலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளருமான ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகரில் 9வது அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா (AIFF)நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் 78 வயதான ஜாவேத் அக்பர் பாடலாசிரியர்,எழுத்தாளராக இந்திய சினிமாவுக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக பத்மபானி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில், "சினிமா தயாரிப்பதில் நாம் மிகவும் முன்னேறிவிட்டோம். இருப்பினும், எதிர்காலம் ரயிலில் ஏறும் போது, பல பொருட்களை பிளாட்பாரத்தில் விட்டு செல்வதை போல சிலவற்றை விட்டுச் சென்றுள்ளோம். அதாவது மொழி, இலக்கியம், பாரம்பரிய இசை ஆகியவை இதில் பின்தங்கியுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா போன்ற ஒரு மாநிலத்தை விட சிறிய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு இதன் மதிப்புகள் என்பது இன்னும் முக்கியம்’ என தெரிவித்தார்.
தொடர்ந்து ஜாவேத் அக்தர் தனது படைப்புகளைப் பற்றி பேசுகையில், “திரைப்பட கதைகளை எழுதும் போது அவற்றின் நிதி அல்லது சமூக தாக்கத்தை தான் ஒருபோதும் நினைத்ததில்லை’ என கூறினார். மேலும் திரையுலக நடிகர்களை பற்றிய மாறிவரும் பார்வையைப் பற்றியும் தனது கருத்துகளை குறிப்பிட்டார். அதாவது "ஒரு படத்தின் ஹீரோ தனது விருப்பமான பெண்ணை திருமணம் செய்து கொள்ள பெற்றோருக்கு எதிராக கிளர்ச்சி செய்த ஒரு காலம் இருந்தது.
பின்னர், ஹீரோக்கள் சமூக ஏற்றத்தாழ்வு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்புச் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது போன்ற கதைகள் அமைக்கப்பட்டது. ஆனாலும், இன்று நாம் அத்தகைய கதாபாத்திரங்களை திரைப்படங்களில் நிலைத்திருக்கும் வகையில் வைத்திருக்க முடியாது. காரணம் எந்த மாதிரியான சினிமாவை உருவாக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள் தீர்மானிக்க வேண்டும், இதனால் திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன,
இந்தியத் திரையுலகம் பல ஆண்டுகளாக நிறைய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு எந்த மாதிரியான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதை இயக்குநர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். முந்தைய காலத்து ஹீரோக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அதனால் தான் இன்றைய திரைப்படங்களில் அவர்களின் கதாபாத்திரங்களை ஒத்த சித்தரிப்பு என்பது வேலை செய்யாமல் போகிறது” எனவும் ஜாவேத் அக்பர் தெரிவித்துள்ளார்.