Janhvi Kapoor: நானும் என் தங்கையும் ஒரே நபரையா..? பேட்டியில் வேதனை தெரிவித்த ஜான்விகபூர்!
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், நான் கேள்விப்பட்டதிலேயே எதிர்கொண்ட மோசமான வதந்தியை பற்றி பேசி இருக்கிறார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் ஜான்வி கபூர், தன்னைப்பற்றி கேள்விப்பட்ட மோசமான வதந்தியை பற்றி பேசி இருக்கிறார்.
பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான, ‘தடக்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக என்ட்ரி ஆவதற்கு முன்னரே அவரது தாயான ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்து விட்டது.
நடிகைகள் என்றாலே அவர்கள் பற்றிய கிசுகிசுக்கள், திரை வட்டாரத்தில் உலா வருவது மிகவும் வழக்கமான விஷயம்தான். ஆனால் சில சமயங்களில், அவை வரம்பு மீறி செல்வதும் நடந்தேறும். அந்த வகையில் ஜான்வி பற்றிய வதந்தி ஒன்றும் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.
View this post on Instagram
இந்த நிலையில், அண்மையில் ஜான்வி கொடுத்த பேட்டி ஒன்றில், அந்த வதந்திதான் நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் மோசமான விஷயம் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார். அப்படி என்னய்யா வதந்தி என்கிறீர்களா?
இது குறித்து அவர் பேசும் போது, “ நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் மோசமான விஷயம், நானும் என்னுடைய தங்கையும் ஒரே நபரை டேட் செய்கிறோம் என்பதுதான். அக்ஷத் ராஜன் எனக்கு சிறுவயதில் இருந்தே எனக்கு நண்பன். ஆனால் அவருடன் நான் டேட்டிங் செய்ததாகவும், அவரிடம் இருந்து நான் பிரிந்த பின்னர், என்னுடைய தங்கை குஷி அவரை டேட்டிங் செய்வதாகவும் செய்திகள் வெளியானது. இது எனக்கு மிகவும் மோசமான விஷயமாக பார்க்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே எங்களின் இருவரின் சிறந்த நண்பனாக அக்ஷத் ராஜன் இருக்கிறான். நாங்கள் வெறும் நண்பர்கள்தான்” என்று விளக்கம் அளித்தார்.
ஜான்வி கபூரின் நடிப்பில் தற்போது ‘மிலி’ படம் உருவாகி வருகிறது. பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக வலம் வரும் போனிகபூர் இந்தப்படத்தின் தயாரித்ததின் மூலமாக, முதன் முறையாக தனது மகள் நடித்த படத்திற்கு தயாரிப்பாளராக மாறியிருக்கிறார். மலையாளத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ஹெலன் படத்தின் ரீமேக்தான் இந்த ‘மிலி’ திரைப்படம்.
மலையாளத்தில் ஆனா பென் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்கியிருந்த, மது குட்டி சேவியரே இந்தி ரீமேக்கையும் இயக்கி இருக்கிறார். த்ரில்லர் டிராமாவான இப்படம் சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த மேக் அப் என இரண்டு தேசிய விருதுகளை வென்றிருந்தது. அதனால், ஆனா பென்னின் சிறப்பான நடிப்புக்கு ஜான்வி ஈடுகொடுப்பாரா என முன்னதாக இப்படத்தின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், முன்னதாக வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்று, ஜான்வியின் காட்சிகள் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.