மேலும் அறிய

Thalapathy Vijay: இன்றே சினிமாவில் கடைசி நாள்.. விலகும் விஜய்.. சோகத்தில் ரசிகர்கள்!

கடந்த ஏப்ரலில் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியான நிலையில் அதனையும் மீறி தியேட்டரில் படத்தைப் பார்க்க அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜயின் ஜனநாயகன்  படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் சினிமாவில் இதுவே அவரின் கடைசி நாளாக பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். 

ஜனநாயகன் படம்

ஹெச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ஜனநாயகன்”. தமிழ் சினிமாவின் தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படம் அவரின் சினிமா வாழ்க்கையில் கடைசிப்படமாகும். முழு நேர அரசியலில் ஈடுபடும் வண்ணம் சினிமாவை விட்டு விலகுவதாக 2024ம் ஆண்டே அறிவித்த நிலையில் அப்போது அவரின் கைவசம் ஒரு படம் இருந்தது. அதைத் தவிர இன்னொரு படம் நடித்து விட்டு விலகுகிறேன் என சொன்னார். அந்த படம் தான் “ஜனநாயகன்”. 

இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ, பாபி தியோல், நாசர், கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகியோர் விஜயின் மேல் கொண்ட அன்பால் இப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றியுள்ளனர். இசையமைத்துள்ள அனிருத்தும் ஒரு பாடலுக்கு விஜயுடன் இணைந்து நடனமாடியுள்ளார். 

படம் ரிலீஸ் - களைகட்டிய தியேட்டர்கள்

இதற்கிடையில் ஜனநாயகன் படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பல பிரச்னைகள் காரணமாக தள்ளிப்போய் கொண்டே இருந்தது. தற்போது விஜய் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று விட்டார். ஜனநாயகன் படமும் பிரச்னைகளை தீர்த்து ரிலீசுக்கு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் 950 தியேட்டர்களில் படம் வெளியாகவுள்ள நிலையில் ஒவ்வொரு தியேட்டரிலும் 4 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. 

Also Read: Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?

கடந்த ஏப்ரலில் ஜனநாயகன் முழு படமும் இணையத்தில் சட்ட விரோதமாக வெளியான நிலையில் அதனையும் மீறி தியேட்டரில் படத்தைப் பார்க்க அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இதனால் விஜயின் கடைசிப்படமான ஜனநாயகன் வசூல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சோகத்தில் விஜய் ரசிகர்கள்

என்னதான் விஜய் படம் வெளியாவது மகிழ்ச்சியளித்தாலும் ஒருபுறம் ரசிகர்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். தங்கள் தளபதியை இனி எப்போது திரையில் காண்போமோ என தங்களுக்காகவே கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றவர்கள் போல அரசியலில் சரிவை கண்டவுடன் மீண்டும் சினிமாவில் நடிப்பவர் அல்ல விஜய். தான் சொன்ன சொல்லில் உறுதியாக இருப்பவர் என்பதால் இனிமேல் அவரின் படங்களை ரீ-ரிலீஸ் செய்து பார்த்துக் கொள்ள வேண்டியது தான் ஆறுதல் சொல்லிக் கொள்கின்றனர். 

நாளை ஜனநாயகன் வெளியாகும் நிலையில் சினிமாவில் இன்றே விஜயின் கடைசி நாள் என சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளங்கள் முழுக்க மிஸ் யூ தலைவா.. இனி இப்படி ஒரு தருணம் அமையாதா.. என சிலாகித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Actress Vaishali: ப்ளீஸ்.. 200 யூனிட் இலவச மின்சாரமே வேண்டாம்.. விஜயால் மன்னிப்பு கேட்ட நடிகை!
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Trisha: விஜயும் - த்ரிஷாவும் லவ் பண்ணாங்க... கொளுத்திப்போட்ட குட்டி பத்மினி.. கடுப்பான த்ரிஷா?
Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget