மேலும் அறிய

Jana Nayagan: ஜனநாயகன் மூலம் இயக்குநராக மாறிய முதல்வர் விஜய்.. அவரே இயக்கிய காட்சி எது தெரியுமா?

ஒரு வழியாக ஜூலை 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 950 தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் ஒரு காட்சியை இயக்கியுள்ளார்.

ஜனநாயகன் படத்தில் விஜய் ஒரு காட்சியை இயக்கியிருப்பதாக இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். அது என்ன காட்சி என்பதைக் காணலாம். 

ஒருவழியாக ஜனநாயகன் ரிலீஸ்

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நாசர், நரேன், பிரியாமணி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்த படம் “ஜனநாயகன்”. முழு நேர அரசியலுக்கு வந்ததால் விஜயின் கடைசிப்படமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தை கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் சென்சார் சான்றிதழ் பிரச்னை, சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு, முழு படம் இணையத்தில் லீக் உள்ளிட்ட பல காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. 

இதற்கிடையில் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் ஜனநாயகன் படத்தை வெளியீடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த வகையில் ஒரு வழியாக ஜூலை 23ம் தேதி ஜனநாயகன் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 950 தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் பல நேர்காணல்களில் பங்கேற்றுள்ளார்.

இயக்குநராக மாறிய விஜய்

அதில் ஒரு நேர்காணலில் விஜயுடன் பணியாற்றிய இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் திலீப்குமார் ஆகியோர் இந்த படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் ஹெச்.வினோத், “ஜனநாயகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பத்திரிக்கையாளராக, விஜயிடம் கேள்வி கேக்கும் மாதிரியான காட்சிக்கு நான் மூன்று பேரை தேர்ந்தெடுத்து இருந்தேன். 

என்னுடைய சாய்ஸில் விஜய் அப்பாவான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அவரின் மிக தீவிர ரசிகரான வருண் சக்கரவர்த்தி, இதற்கு முன்னால் அவரை வைத்து படம் இயக்கிய அட்லீ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இருந்தனர். இதுதொடர்பாக நான் என் இயக்குநர்களிடம் பேசினேன். யாரை தேர்வு செய்யலாம் என கேட்டபோது அவர்கள் அனைவரும் நேராக மூன்றாவதாக இருந்த இயக்குநர்கள் பெயரை ஓகே செய்தார்கள். 

இதையும் படிங்க: Jana Nayagan: ஜனநாயகன் பார்க்க குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.. விஜய் தலைக்குமேல் தொங்கும் கத்தி!

அவர்கள் 3 பேரும் அந்த காட்சியில் நடித்துள்ள நிலையில் தேர்தலுக்கு முன்பு வந்திருந்தால் அது பேசப்பட்டிருக்கும். இப்போது தேர்தல் முடிந்து விட்டதால் ஒத்துப்போகுமா என்பது தெரியவில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜ், அட்லீ, நெல்சன் திலீப்குமார் ஆகியோர் நடித்த காட்சியை விஜயே இயக்கியுள்ளார். இது பலருக்கும் தெரியாத விஷயமாகும். 

இது 200 சதவிகிதம் விஜயின் படமாக இருக்கும். நெய்வேலியில் அவர் மக்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக வெளியிட்டோம். இந்த படத்தின் டைட்டில் இரண்டு விதமாக இருக்கும். ஒன்று விஜய் மக்களின் நாயகன், இரண்டாவது தையில் இருக்க ஜனநாயகத்தை காப்பாற்றுகிற நாயகன் என்பதால் அதனை வைக்கலாம் என முடிவு செய்தோம். டிசைனர் கோபி பிரச்ன்னா அதனை வடிவமைத்து கொண்டு வந்த நிலையில் சிறப்பாக அமைந்தது என ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார். 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
Embed widget