போலி Facebook ஐடி! தூது அனுப்பிய தந்தை! - காதல் வலையில் வீழ்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர்
”அதன் பிறகு எனக்கும் என் தந்தைக்கும் மிகப்பெரிய சண்டையே வந்துவிட்டது. அவரை அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து பிளாக் செய்துவிட்டேன்.”
ஹாலிவுட்டின் பிரபல நடிகரும் இயக்குநருமான . ஜேம்ஸ் மொரோசினி தான் தனது தந்தையால் ஏமாற்றப்பட்டது குறித்து மனம் திறந்துள்ளார்.
ஜேம்ஸ் மொரோசி்னி நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் “ஐ லவ் மை டாட் “.காமெடி ஜானரில் அப்பா மகனுக்கு இடையில் இருக்கும் சுவாரஸ்ய உறவு குறித்து படத்தில் பேசியிருக்கிறார் ஜேம்ஸ் . படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் சூழலில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜேம்ஸ் , இந்த படத்தின் கதைக்கரு உருவாக தனது தந்தைதான் காரணம் என சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது “ நான் ஒரு நாள் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ஃபேஸ்புக்கை ஓபன் செய்த பொழுது , பெக்கா என்னும் அழகான பெண் ஒருவர் எனக்கு நண்பராக இணைய விருப்பம் தெரிவித்திருந்தார். அந்த பெண்ணும் நானும் ஃபேஸ்புக் வாயிலாக தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் இருவருக்குமான பிடித்த விஷயம் , பிடிக்காத விஷயம் என அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டோம். எனக்கும் பெக்காவிற்கும் ஒரே மாதிரியான டேஸ்ட். இப்படியாக சென்றுக்கொண்டிருந்த உறவின் குட்டு ஒருநாள் வெளிப்பட்டது.
View this post on Instagram
அந்த பெண்ணின் இ-மெயில் ஐடியை பார்க்கும் பொழுது என் தந்தை பயன்படுத்தும் மெயில் ஐடி போலவே இருந்தது. அதன் பின்னர்தான் எனக்கு தெரிய வந்தது. எனது தந்தை என்னை உளவு பார்ப்பதற்காகவும் , நான் எப்படி நடந்துக்கொள்கிறேன் என்பதை சோதிப்பதற்காக கேட்ஃபிஷ் செய்திருக்கிறார். ( கேட்ஃபிஷ் என்பது சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை உருவாக்கி பேசுவது அல்லது பணம் பறிப்பது ) . இதனை அறிந்து நான் திடுக்கிட்டேன். அதன் பிறகு எனக்கும் என் தந்தைக்கும் மிகப்பெரிய சண்டையே வந்துவிட்டது.
அவரை அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்து பிளாக் செய்துவிட்டேன். எனது 20 வயதில் நடந்த இந்த சம்பவத்தை மையமாக வைத்துதான் ஐ லவ் மை டாட் திரைப்படத்தை எடுக்கும் எண்ணம் வந்தது” என SXSW திரைப்பட அறிமுக விழாவில் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமல்லாமல் படத்திற்கு நல்ல புரமோஷனாகவும் அமைந்துவிட்டது.