Actor Vinayakan: ஜெயிலர் பட வில்லனை தட்டித்தூக்கிய காவல் துறை.. குடி போதையில் இப்படி பண்ணிட்டாரே!
ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டின் விருப்பமான வில்லனாக உருவெடுத்துள்ளவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன்.
மது போதையில் உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுடன் நடிகர் விநாயகன் தகராறில் ஈடுபட்டு கைதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல் துறையினருடன் தகராறு
ஜெயிலர் படத்தின் மூலம் கோலிவுட்டின் விருப்பமான வில்லனாக உருவெடுத்துள்ளவர் பிரபல மலையாள நடிகர் விநாயகன். தனித்துவமான நடிகர், பாடகர், நடனக் கலைஞர் என கவனமீர்த்து தனக்கென தன் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விநாயகன், ஜெய்லரில் வர்மன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களையும் ஈர்த்துள்ளார்.
அடுத்த மாதம் ரிலீசாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் விநாயகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் குடிபோதையில் தகராறு செய்ததாக விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் காவல் நிலையத்துக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் மது போதையில் விநாயகன் தொந்தரவு கொடுத்ததாகவும் இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் வில்லன் வர்மன்
மலையாளம் கலந்த தமிழில் பேசி வர்மன் கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோதி தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்துள்ள விநாயகன், திமிரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முன்னதாக மலையாள ஊடகத்துக்கு பேட்டியளித்த விநாயகன் தான் தமிழில் பொன்னியின் செல்வன் மற்றும் பான் இந்திய படங்களான கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்ததாகவும் தெரிவித்திருந்தார். மேலும், “ஜெயிலர் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது.. ”ஸ்வப்பனத்தில கூட யோசிக்கல சாரே” என்று. இந்த மாதிரிதான் என் நிலை. வர்மன் பாத்திரம், நான் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத அளவுக்கு இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை” என்றும் பேசியிருந்தார்.
அடுத்தடுத்த படங்கள்
மேலும், இன்று வெளியான துருவ நட்சத்திரம் ட்ரெய்லரிலும் விநாயகனின் கதாபாத்திரம் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது. ஜெயிலர் படத்தில் நடித்தது போல் மாஸான கதாபாத்திரத்தில் துருவ நட்சத்திரத்திலும் நடித்து லைக்ஸ் அள்ளுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி கரியரில் பெரிதும் கவனமீர்த்துள்ள சூழலில் விநாயகன் இப்படி மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு கைதாகியுள்ளது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விநாயகன் ஏற்கெனவே மீ டூ வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்த்கக்கது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: இந்த 5 பேர் தான் வைல்ட்கார்டு என்ட்ரி.. பிக்பாஸ் வீட்டுக்கு வரும் புது போட்டியாளர்கள் யார் தெரியுமா?