![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: ECI/ABP News/ABP Majha)
Bigg Boss 7 Tamil: இந்த 5 பேர் தான் வைல்ட்கார்டு என்ட்ரி.. பிக்பாஸ் வீட்டுக்கு வரும் புது போட்டியாளர்கள் யார் தெரியுமா?
வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போகும் ஐந்து போட்டியாளர்கள் யார் தெரியுமா...
![Bigg Boss 7 Tamil: இந்த 5 பேர் தான் வைல்ட்கார்டு என்ட்ரி.. பிக்பாஸ் வீட்டுக்கு வரும் புது போட்டியாளர்கள் யார் தெரியுமா? bigg boss tamil list of new contestants in wild card entry Bigg Boss 7 Tamil: இந்த 5 பேர் தான் வைல்ட்கார்டு என்ட்ரி.. பிக்பாஸ் வீட்டுக்கு வரும் புது போட்டியாளர்கள் யார் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/24/a723bcdf284663cc2bd108c69ba766dd1698144291105572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் தமிழ் 7
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் 7ஆவது சீசன் 23ஆவது நாளை எட்டியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
முதல் வார எலிமினேஷனில் அனன்யா ராவ் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் பவா செல்லதுரை தன் விருப்பத்தின் பேரில் பிக்பாஸ் வீட்டில் இந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா, மாயா கிருஷ்ணன், பிரதீப் ஆண்டனி, விசித்திரா, யுகேந்திரன், கூல் சுரேஷ், நிக்ஸன், விஷ்ணு, சரவண விக்ரம் உள்ளிட்டவர்கள் நடுவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்படியான சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி அறிவிக்கப்பட்டுள்ளது.
வைல்ட் கார்டு எண்ட்ரி
தரமான சம்பவம் இருக்கு போலயே 🔥
— Vijay Television (@vijaytelevision) October 23, 2023
Bigg Boss Tamil Season 7 - அக்டோபர் 29 இரவு 8.00 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/EfJ6q2fUh1
ஒவ்வொரு வருடமும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு சில போட்டியாளர்கள் வெளியேறிய பின் இடைப்பட்ட காலத்தில் மேலும் புதிய போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டில் அனுமதிப்பதே வைல்டு கார்ட் எண்ட்ரி எனக் குறிப்பிடப்படுகிறது. வரும் அக்டோபர் 29ஆம் தேதி பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்டு முறையில் ஐந்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கமல்ஹாசன் இருக்கும் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி.
ஏற்கெனவே உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கும் புதிய போட்டியாளர்களுக்கு இருக்கும் ஒரு வித்தியாசம் என்றால் போட்டியின் அனைத்து விதிமுறைகள் உள்ளே அனைவரின் உண்மையான குணங்களையும் புதிய போட்டியாளர்கள் தெரிந்து வைத்திருப்பதால் அது அவர்களுக்கு ஒரு சாதகமான ஒரு அம்சமாக இருக்கிறது. மேலும் புதிய போட்டியாளர்கள் உள்ளே ஏற்கெனவே ஒரு அணியாக இருக்கும் பழைய போட்டியாளர்களுடன் அவ்வளவு எளிதாக இணைந்துகொள்ள முடியாது என்பதே அவர்களுக்கு இருக்கும் சவால்!
ஐந்து போட்டியாளர்கள்
இந்த ஐந்து போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் இணையதளத்தில் இந்த போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி கானா பாலா, மா.கா. பா ஆனந்த், பப்லு ப்ரித்விராஜ், நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா, மற்றும் வி.ஜே அர்ச்சனா ஆகிய ஐந்த நபர்கள் தான் பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்களாக கலந்துகொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய போட்டியாளர்களால் உருவாக இருக்கும் புதிய பிரச்சனைகளை பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)