Jailer Frist Single: போட்றா வெடிய... நெல்சன் ஸ்டைலில் வெளியாகும் 'ஜெயிலர்' பர்ஸ்ட் சிங்கிள்..! எப்போ தெரியுமா...?
ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
Jailer Frist Single : ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் ரசிகர்கள் மத்தியல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி வரும் நிலையில், தற்போது படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
எதிர்பார்ப்பில் ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் இந்தியாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் வரிசையில் நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் பல மொழி சூப்பர் ஸ்டார்களும் இணைந்து நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், நடிகைகள் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய ஹீரோயின்களும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், பாலிவுட் பிரபலம் ஜாக்கி ஷெராஃப் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.
ப்ரோமோஷன்ஸ்
மேலும், யோகி பாபு, ஜாஃபர், விநாயகன், வசந்த் ரவி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி என பல இடங்களில் நடைபெற்று முடிந்தது. இந்த படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் இருக்கையில் விரைவில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக உள்ளது. குறிப்பாக நெல்சன் ஸ்டைலில் வெளியாக உள்ளது. பொதுவாக நெல்வன் தன் படங்களில் ப்ரோமேஷன்களை வித்தியாசமாக செய்வார். டாக்டர், பீஸ்ட் போன்று ஜெயிலரிலும் வித்தியாசமாக செய்வார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சிங்கிள்
ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் நான்கு நாட்களில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் இந்த அறிவிப்பை நெல்சன் அவரது ஸ்டைலில் ஒரு ப்ரோமோவாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பீஸ்ட் ப்ரோமோவில் விஜய் போனில் பேசியதை போல ஜெயிலர் முதல் சிங்கிளில் ரஜினி இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
.@anirudhofficial andha first single…?? ⏳⏰#JailerUpdate @Nelsondilpkumar pic.twitter.com/9Ytc636nDj
— Sun Pictures (@sunpictures) July 1, 2023
ப்ரோவில் ரஜினி இடம்பெறவில்லை என்றாலும், அவரின் குரலை கேட்க ரசிர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது வெளியான ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பு தேதி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.