Jaibhim | ஹிந்தியா பேசுற .. ஜெய்பீம் வைரல் காட்சிக்கு குவியும் பாராட்டுகளும், விமர்சனங்களும்..
“ எந்தவொரு இயக்குநரும் மொழிக்கு எதிரானவர்கள் அல்ல..” தென்னிந்திய விமர்சகர்கள் விளக்கம்
சூர்யா நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்த படம் நீதி அரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் ஜெய் பீம் படத்தில் நடித்த காட்சி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நகை அடகுக்கடைக்காரர் ஒருவர் இந்தியில் பேச , அவரை அறைந்த பிரகாஷ்ராஜ் “தமிழ்ல பேசுடா” என்கிறார். இதனை பகிர்ந்த பல வட இந்திய விமர்சகர் ஒருவர்.”ஜெய் பீம் படத்தை பார்த்தேன் அதில் பிரகாஷ் ராஜ் , இந்தி பேசுபவரை அறைவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தி பேசினால் தவறா, அந்த காட்சி படத்திற்கு தேவையில்லாத ஒன்று..அதனை நீக்குவார்கள் என நம்புகிறேன் “ என குறிப்பிட்டிருந்தார்.
I am really heartbroken after watching #JaiBhim, nothing against actor or anyone but felt really bad, there is a scene in the film where a person speaks Hindi and Prakash Raj slaps him and tells him to speak in Tamil
— Rohit Jaiswal (@rohitjswl01) November 1, 2021
Honestly this kind of scene was not needed….Hope they cut it
அதற்கு விளக்கமளித்த தென்னிந்திய விமர்சகர் ராஜசேகர் “எந்தவொரு இயக்குநரும் மொழிக்கு எதிரானவர்கள் அல்ல.. பிரகாஷ்ராஜின் கதாபாத்திரம் இந்தி மொழி தெரியாத கதாபாத்திரம் அவர் விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நபர் செய்யும் யுக்திதான் இந்தியில் பேசுவது. அதனால்தான் தமிழில் பேசுமாரு பிரகாஷ் ராஜ் அறைந்தாரே தவிர, அது மொழிக்கு எதிராக அல்ல “ என குறிப்பிட்டுள்ளார்.
Hi, the scene is not against Hindi-speaking Indians. The particular character tries to get away by speaking in Hindi (so that Prakash Raj wouldn't understand) and knowing this strategy, he slaps and asks him to speak in Tamil.Tamil filmmakers are not against the language Hindi1/2
— Rajasekar (@sekartweets) November 2, 2021
தென்னிந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் ஜெய் பீம் திரைப்படம் ,சிலரை புன்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ட்விட்டர் பக்கத்தில் ஜெய் பீம் படத்தின் மேற்குறிப்பிட்ட காட்சிகளுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள் ..அதிலும் சிலர் பிரகாஷ்ராஜை நேரடியாகவே சாடுகின்றனர். “அன்புக்குறிய பிரகாஷ் ராஜ் இந்தி உள்ளிட்ட இந்திய மொழியில் பேசினால் அடிக்க வேண்டும் என்றா சட்டம் கூறுகிறது.நீங்கள் ஒரு கன்னடிகா.இந்தி, தமிழ், மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகள் பேசுவதால் உங்களை அறையலாமா” என கேட்டுள்ளார். சிலர் காட்சிகளின் தேவை அப்படியானது என விளக்கமளித்தும் வருகின்றனர்.
Dear Prakash Rai alias Prakash Raj, which article of the constitution provides rights to hit any individual just because he's not speaking Hindi or any Indian language?
— Chiru Bhat | ಚಿರು ಭಟ್ (@mechirubhat) November 2, 2021
If that's so, how many Kannadigas should hit u for speaking in Hindi, Tamil, Malayalam, Telugu in other movies? pic.twitter.com/y0GQrnX1Tf
Tamilian self make propaganda against Hindi. But they make business from Hindi reason. Without Hindi nothing in India.
— Rajesh Kumar Dutta (@RKD1803) November 2, 2021
I respect Tamil language it is the oldest language
You can prefer Tamil over Hindi.
— Rock Star (@dalla420t) November 2, 2021
That's understandable.
But showing a person getting slapped for speaking in Hindi is absolutely wrong ❌