Watch Video | ஹிந்திலயா பேசுற... பொளேர் விட்ட பிரகாஷ் ராஜ்; வைரலாகும் சீன்..
சந்துருவின் கோரிக்கையை ஏற்று ராஜாக்கண்ணு வழக்கை ஐஜி பெருமாள்சாமி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடும்.
இருளர் இன மக்களின் துயரமான வாழ்வை பதிவு செய்திருக்கும் படம் ஜெய் பீம். ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் இப்படத்தில் மணிகண்டன், லிஜாமோல் ஜோஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
ராஜாக்கண்ணு என்ற இருளர் இனத்தவரை காவல் துறையினர் காவல் நிலையத்தில் வைத்து 1993ஆம் ஆண்டு கொலை செய்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி வழக்கறிஞர் சந்துருவை (சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்) அணுக அவர் சட்டப்போராட்டம் நடத்தி நீதி பெற்று தந்தார். சந்துரு நீதி பெற்று தருவதற்கு துணையாக இருந்தவர் ஐஜி பெருமாள்சாமி.
சந்துரு எப்படி இந்த வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுகிறாரோ; காவல் துறைக்குள் இருந்துகொண்டு காவல் துறையின் அட்டூழியங்களை மனசாட்சிக்கும், சட்டத்திற்கும் விரோதம் இல்லாமல் வெளியில் கொண்டு வந்த பெருமாள்சாமியும் முக்கியத்துவம் வாய்ந்தவரே.
ஜெய் பீம் படத்தில் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யாவும், ஐஜி பெருமாள்சாமி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜும் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தில் ஒரு காட்சி அதிகம் பகிரப்பட்டுவருகிறது. சந்துருவின் கோரிக்கையை ஏற்று ராஜாக்கண்ணு வழக்கை ஐஜி பெருமாள்சாமி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடும்.
உத்தரவின்படி பெருமாள்சாமி (பிரகாஷ் ராஜ்) ராஜாக்கண்ணுவும், அவரது உறவினர்களும் நகையை திருடிவிட்டு தன்னிடம் அடகு வைத்ததாக ஹிந்தியில் பேசுவார்.
கற்பி
— isiraj (@isrj17) November 2, 2021
கற்றுக்கொள்
ஒன்று சேர் புரட்சி செய்#ஜெய்பீம் pic.twitter.com/F2inu33G3g
அப்போது அந்த நகைக்கடைக்காரரை கன்னத்தில் ஓங்கி அறையும் ஐஜியிடம், அந்த நகைக்கடைக்காரர்‘எதுக்கு சார் அடிச்சிங்க’ என்று தமிழில் கேட்பார். அதற்கு பெருமாள்சாமி, “தமிழில் பேசு” என்பார். தற்போது இந்தக் காட்சி சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பி கிடக்கிறது.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக களத்தில் இறங்கி போராடிய தமிழ்நாடு சமீபத்தில் ஹிந்தி தெரியாது போடா என்று சமூக வலைதளங்களிலும் களமிறங்கி தேசிய அளவில் அதனை ட்ரெண்டாக்கியது. இப்படி தொடர்ந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் பலர் களமாடிவரும் சூழலில் ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற இக்காட்சி அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
அதேசமயம் இந்தக் காட்சி தேவையில்லாதது எனவும் ஒரு தரப்பினர் ட்விட்ட்ரில் கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
We wait for Tamil films… We support them, we request the makers to release it Pan India, in return we don’t want anything but just love…. If not love then atleast not humiliation… 🙏
— Rohit Jaiswal (@rohitjswl01) November 1, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்