மேலும் அறிய

Watch Video | மண்ணிலே ஈரம் உண்டு... ஜெய் பீம் அன்பை நிஜத்தில் காட்டிய குழந்தைகள்!!

ஜெய்பீம் படத்தில் இறுதியாக செங்கேணிக்கு நீதிமன்றத்தில் நியாயம் வாங்கிக்கொடுப்பார் சூர்யா. இந்தக் காட்சி நகர நகர பின்னணியில் ‘மண்ணிலே ஈரம் உண்டு’ பாடல் ஒலிக்கும்.

Jai Bhim Climax Song | ஜெய்பீம் படத்தில் இடம்பெற்ற பாடலின் பின்னணியில் குழந்தை ஒன்று மற்றொரு குழந்தையை கட்டியணைக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய்பீம் படத்தில் இறுதியாக செங்கேணிக்கு நீதிமன்றத்தில் நியாயம் வாங்கிக்கொடுப்பார் சூர்யா. உடனே செங்கேணி நெகிழ்ந்து போய் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறுவார். இந்தக் காட்சி நகர நகர பின்னணியில் ‘மண்ணிலே ஈரம் உண்டு’ பாடல் ஒலிக்கும். நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் அடங்கிய இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். படம் வெளியான நாள் முதலே இந்தப் பாடல் எல்லோருக்கும் பிடித்தமான பாடலாக மாறிவிட்டது. அன்றிலிருந்தே சமூக வலைதளங்களில் உலா வந்துக் கொண்டிருந்த இந்தப் பாடல் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோவாக மாறியுள்ளது.

விழா ஒன்றில், குழந்தை ஒன்று அங்கு பலூன் விற்றுக்கொண்டிருந்த ஒருவரின் குழந்தையை தன்னுடன் ஆடும் படி அடம் பிடிக்க,  அந்தக் குழந்தை மெதுவாக முன்வந்து அதனை கட்டியணைக்க முன் வருகிறது. நீண்ட அழுக்கு பனியனை அந்தக் குழந்தை அணிந்திருந்த போதும், இன்னொரு குழந்தை அதனை சற்றும் பொருட்படுத்தாமல்அந்தக் குழந்தையை கட்டியணைத்துக் கொள்கிறது. இதன் பின்னணியில்  ‘மண்ணிலே ஈரம் உண்டு’ பாடல் ஒலிக்கிறது. பார்த்த உடனே மனதை நெகிழ செய்துள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள  'ஜெய் பீம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. குறிப்பாக வன்னியர் சமூகத்தினர் படத்தில் தங்கள் சமுதாயம் குறித்த தவறான தகவல் இடம்பெற்றிருப்பதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து படத்தின் சில காட்சிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டன.

இருப்பினும், சூர்யா தங்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் நஷ்ட ஈடாக 5 கோடி தரவேண்டும் என்றும் பா.ம.க சார்பில் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில்தான் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கருணாஸ் உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஜெய்பீம் படத்தின் மண்ணிலே ஈரம் உண்டு பாடல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget