மேலும் அறிய

ஏகப்பட்ட மனவருத்தம்... பாண்டியனுக்காக சித்ரா லட்சுமணனிடம் கோபப்பட்ட பாரதிராஜா!

“ எதுக்கும் பையனுக்கு ஒரு ஆடிஷன் வச்சு பார்த்துடுவோம் “  என கூறியிருக்கிறார்.  ஏற்கனவே பாண்டியனை ஹீரோவாக்க விருப்பம் இல்லாமல் இருந்த சித்ரா லட்சுமணனுக்கு இது மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியது.

மண்வாசனை :

1983 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் வெளியான திரைப்படம் மண்வாசனை. இந்த படம்தான் மறைந்த நடிகர் பாண்டியனின் அறிமுக திறப்படம் . இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தின் தலைப்பிற்கு ஏற்ப மணக்க மணக்க மண் வாசம் திரைப்படம். 



 உங்களுக்கு வேற ஹீரோவே கிடைக்கலையே ? 

மண்வாசனை திரைப்படத்தின் ஷூட்டிங் போடிநாயக்கனூர் மற்றும் மதுரை  சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு முதலில் பாண்டியனை வரவழைத்துவிட்டு அதன் பிறகு இயக்குநர் பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் காரில் சென்றிருக்கின்றனர். ஆரம்பத்தில் பாண்டியன்தான் ஹீரோ என ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சித்ராவிற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகப்பட்ட மனக்குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர் படக்குழுவினர். சித்ராவிடம்  வந்து “ ஏன் சார் உங்களுக்கு வேற ஹீரோவே கிடைக்கலையே ? பாண்டியனெல்லாம் ஹீரோவா ? காமெடியன் மாதிரி இருக்கான்“ என சிலர் சொல்லவே சித்ராவிற்கு அதுவே ஒரு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு பாரதிராஜா என்ன நினைத்தாரோ தெரியவில்லை , சித்ராவிடம் “எதுக்கும் பையனுக்கு ஒரு ஆடிஷன் வச்சு பார்த்துடுவோம்“  எனக் கூறியிருக்கிறார்.  ஏற்கனவே பாண்டியனை ஹீரோவாக்க விருப்பம் இல்லாமல் இருந்த சித்ரா லட்சுமணனுக்கு இது மிகுந்த ஆனந்தத்தை ஏற்படுத்தியது.


ஏகப்பட்ட மனவருத்தம்... பாண்டியனுக்காக சித்ரா லட்சுமணனிடம் கோபப்பட்ட பாரதிராஜா!


வாக்குவாதத்தில் முடிந்த பேச்சுவார்த்தை ;


அடுத்த நாள் மேக்கப் ஆடிஷனில் செட்டில் இருந்த 95 சதவிகத்தினர் பாண்டியன் ஹீரோ மெட்டீரியல் இல்லை என சித்ரா லட்சுமணனிடம் கூறியிருக்கின்றன. ஆனால் ஒருவரும் பாரதிராஜாவிடம் அந்த விஷயத்தை பகிரவில்லை. அதன் பிறகு எழுத்தாளரும், இயக்குநருமான கலைமணியிடம் கதாநாயகனை மாற்ற வேண்டும், இது குறித்து இயக்குநரிடன் பேசலாமா என சித்ரா கூற சரி என இரவு 10 மணியளவில் இருவரும் இயக்குநர் பாரதிராஜாவின் அறைக்கு சென்றிருக்கின்றனர். ஆரம்பத்தில் சாதாரண பேச்சாக இருந்தது பின்னர் மிகப்பெரிய விவாதமாக மாறிவிட்டது. உடனே பாரதிராஜா சித்ரா லட்சுமணனிடம் “அந்த பையன் தான் ஹீரோ... உன்னால் முடிந்தால் படத்தை பண்ணு.. இல்லைனா நானே தயாரிச்சுக்கிறேன்.. உனக்கு அடுத்த படம் பண்ணி தற்றேன்“ எனக் கூறியிருக்கிறார்.



ஏகப்பட்ட மனவருத்தம்... பாண்டியனுக்காக சித்ரா லட்சுமணனிடம் கோபப்பட்ட பாரதிராஜா!

சபாஷ் பாண்டியா !

உடனே லட்சுமணன் பாரதிராஜாவிடம் “இனிமே நான் இந்த பையன் விஷயத்தில் தலையிட மாட்டேன்“ என உறுதியளித்திருக்கிறார். அதன் பின்னர் ஷூட்டிங் தொடங்கி நடைப்பெற்றிருக்கிறது.  பலரின் வெறுப்பிற்கு மத்தியில் நடித்தாலும் பாண்டியன் திறமையான நடிப்பையே வெளிப்பட்டுத்தினார் என சித்ரா லட்சுமணன்  நேர்காணலில் தெரிவித்திருந்தார்

 

 

 

தலைப்பு செய்திகள்

அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
அனிருத்தின் திருமணத்தை பத்து வருடங்கள் முன்பே கணித்த பெண் ஜோதிடர்...வைரலாகும் வீடியோ
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
தேவா மறைவால் உடைந்துபோன இளையராஜா..அனைத்து ஸ்டுடியோ பணிகளும் ரத்து
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
Deva: வெள்ளை மனம் கொண்டவர் தேவா.. கலங்கி நின்ற ஸ்டாலின்.. முதல் ஆளாக நேரில் அஞ்சலி!
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி
தேவாவின் மாஸ்டர் டச்...சூப்பர்ஸ்டார் டைட்டில் கார்ட் பின்னணி இசை உருவான பின்னணி

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget