Watch Video Ritika Singh : "ஏய் சண்டக்காரி” : வியர்வை சொட்ட சொட்ட.. கெத்துக்காட்டும் இறுதிச்சுற்று ரித்திகா சிங்..!
நடிகை ரித்திகா சிங் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ரித்திகா சிங் வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட் வீராங்கனையான ரித்திகா சிங் திரைத்துறைக்குள் நுழைந்தாலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்காக கடினமான உடற்பயிற்சிகளை இப்போதும் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான பல வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போதும் அவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
அடிப்படையில் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட் வீராங்கனையான ரித்திகா சிங் மணிரத்னம், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று படம் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்தப்படத்தில் அவரது நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது.
View this post on Instagram
தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் ‘ஆண்டவன் கட்டளை’ ‘தெலுங்கு இறுதி சுற்று ரீமேக்’, ‘சிவலிங்கா’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது ‘பாக்சர்’ ‘ ‘பிச்சைக்காரன் 2’, ‘வணங்கா முடி’ , ‘கொலை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அணமையில் இவரது நடிப்பில் ‘டேய்’ என்ற மியூசிக் வீடியோ வெளியானது.