விஜய் மீது இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி புகார்.. ஆபாசமாக பேசும் தொண்டர்கள்.. பரபரப்பு
தவெகவில் இருந்து திமுகவுக்கு தாவிய இன்ஸ்டா பிரபலம் வைஷ்ணவி விஜய் மீது புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தவெக என்ற கட்சியை தொடங்கிய பிறகு முழு வீச்சில் களப்பணி ஆற்றி வருகிறார். திமுக அரசை கடுமையாக விமர்சித்து வரும் விஜய், ஒரு போதும் திமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்றும் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து லாக்கப் மரணத்தில் இறந்தவர்களின் குடும்பங்களை ஒன்றிணைத்து விஜய் தலமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் வெற்றி பெற்றதா என்பதை தாண்டி, நாளுக்கு நாள் மக்கள் அவரது கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தவெகவில் இருந்து திமுகவிற்கு தாவிய வைஷ்ணவி தற்போது பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
யார் இந்த வைஷ்ணவி?
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கள் மற்றும் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடி கவனத்தை ஈர்த்தவர் வைஷ்ணவி. கோவையை சேர்ந்த இவர். ரீல்ஸ் வீடியோக்களை பதிவிடுவது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்களுடன் இணைந்து சமூக சேவை பணிகளையும் செய்து வந்துள்ளார். இவரது தாயார் திமுக நிர்வாகி என்றாலும், மகள் தவெகவில் இருப்பது பேசுபொருளானது. அதைத்தொடர்ந்து ஒரு இளம்பெண் தவெகவில் முக்கிய நிர்வாகியாகவும் இடம் வகித்தார் வைஷ்ணவி. தவெக மாநாடு முடிவுற்ற ஒரு மாதத்தில் தவெகவினர் மீது புகார் தெரிவித்தார். சமூகவலைதளத்தில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது என கண்டீஷன் போட்டது பிடிக்கவில்லை. அதுமட்டும் இல்லாமல் இங்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி திமுகவில் இணைந்தார்.
விஜய் மீது புகார்
திமுகவில் இணைந்த பிறகு வைஷ்ணவி விஜயை கடுமையாக விமர்சித்து வருகிறார். விஜய்க்கு அரசியல் தெளிவு இல்லை என்றும் பேசினார். பின்பு தவெக தொண்டர்களும் வைஷ்ணவியை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர். அரசியல் அறிவு இல்லாத வைஷ்ணவி என்றும் விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில், வைஷ்ணவி, தவெகவினர் தன்னை தனிப்பட்ட முறையில் அவதூறு பரப்பி வருவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அதில், தவெகவினர் தன் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்தும், மோசமான வார்த்தைகளால் திட்டுகின்றனர். எனவே தவெக தொண்டர்கள் மீதும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறிய விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
திமுக விரிக்கும் வலை
சீமானுக்கு எப்படி நடிகையை வைத்து கிசுகிசுக்களில் சிக்க வைக்கிறார்களோ அதேபான்று வைஷ்ணவியை வைத்து திமுக போடும் திட்டம் என தவெகவினர் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த புகார் உண்மை என்றால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்போம். ஆனால், கத்துக்குட்டி வைஷ்ணவிக்கெல்லாம் விஜய் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திமுக செய்யும் மோசமான அரசியலாக பார்க்கிறோம். தவெக தொண்டர்களே அலர்ட்டாக இருங்கள் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இதுபோன்று பல ரூபங்களை திமுக செய்ய காத்திருக்கிறது. அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்றும் தவெகவினர் தெரிவிக்கின்றனர்.





















