மேலும் அறிய

Indian 2 Special Show: இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி!

Indian 2 Special Show: படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் கோரிக்கையை ஏற்று இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 (Indian 2) திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது.

கோரிக்கை வைத்த லைகா: தமிழ்நாடு அரசு அனுமதி

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் கோரிக்கையை ஏற்று இந்தியன் 2 படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி இந்தியன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் நாளான நாளை ஜூலை 12ஆம் தேதி ஒரு சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி, இரவு 2 மணிக்குள் இறுதிக்காட்சி நிறைவடைய வேண்டும்  என்றும், நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ப்ரீபுக்கிங்கிலேயே வசூலைக் குவிக்கும் இந்தியன் 2

இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரீபுக்கிங் உலக அளவில் கடந்த ஜூன் 21ஆம் தேதியே தொடங்கிவிட்டது. சில நாள்களுக்கு முன்னதாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில், படம் ப்ரீபுக்கிங்கிலேயே வசூலைக் குவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, துபாய் என படத்தின் ப்ரொமோஷன் பணிகள் களைகட்டி வரும் நிலையில், ப்ரீ புக்கிங்கில் மட்டும் உலக அளவில் இதுவரை 17 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொன்னியின் செல்வன் வரிசையில் இந்தியன் 2

இந்தியன் 2 திரைப்படம் சுமார் 250 கோடிகள் பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வசூலில் துவண்டு கிடக்கும் தமிழ் சினிமாவை இப்படம் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி அடுத்த ஆறு மாதங்களில் இந்தியன் 3 திரைப்படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் பாகங்கள் போல் இப்படம் லைகாவுக்கு மற்றொரு வசூல் சாதனையை புரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் 2 திரைபடத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் தாத்தா வராரு, கேலண்டர் சாங் உள்ளிட்ட பாடல்கள் ஏற்கெனவே ரீல்ஸ்களை ஆக்கிரமித்து இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளன. மறைந்த நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, நண்டு ஜெகன் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Lingusamy: இந்த ஒரு காரணத்திற்காகவே சௌமியா அன்புமணி ஜெயிக்கணும்னு நெனச்சேன்! இயக்குநர் லிங்குசாமி!

Thangalaan Trailer Review: டாரண்டினோவின் ஜாங்கோ போல் விக்ரமின் தங்கலான் : டிரைலர் ஹைலைட்ஸ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன  உயிர்கள்
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன உயிர்கள்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
Embed widget