மேலும் அறிய

Lingusamy: இந்த ஒரு காரணத்திற்காகவே சௌமியா அன்புமணி ஜெயிக்கணும்னு நெனச்சேன்! இயக்குநர் லிங்குசாமி!

Lingusamy - Sowmiya Anbumani: “அந்தக் காரணத்துக்காகவே சௌமியா அன்புமணி அந்தத் தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன், ஆனால் அது கடைசி நிமிடத்தில் மிஸ்ஸாகிவிட்டது” - இயக்குநர் லிங்குசாமி

சென்னையில் நடைபெற்ற  பேட்மிண்டன் விளையாட்டு தொடர்பான தனியார் நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், இயக்குநர் லிங்குசாமி (N. Lingusamy) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

‘குடும்பமாக வாக்கு சேகரித்தனர்’

அப்போது பேசிய இயக்குநர் லிங்குசாமி, “அன்புமணி ராமதாஸ் எனக்கு சகோதரர் போன்றவர். எலக்‌ஷன் நேரத்தில் பொதுவாக நான் முடிவுகளை பெரிதாக பார்க்க மாட்டேன். ஆனால் இந்த முறை ஒரே ஒரு தொகுதியை மட்டும் ரொம்ப ஆர்வமாகப் பார்த்து வந்தேன். நிஜமாகவே.. என் வீட்டில் எனக்கிருக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் மாதிரி தான் அன்புமணி ராமதாஸ் சாரின் மகள்களும். அரசியல் தாண்டி,  எவ்வளவு அழகாக, அந்தத் தொகுதியில் மட்டும் குடும்பமாகச் சென்று தங்கள் அம்மாவுக்காக வாக்கு சேகரித்தனர். அந்த ஒரு காரணத்துக்காக சௌமியா அன்புமணி (Sowmiya Anbumani) அந்தத் தொகுதியில் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன், ஆனால் அது கடைசி நிமிடத்தில் மிஸ்ஸாகிவிட்டது.

‘அன்புமணி போன்ற தலைவர்கள்..’

எனக்கு இன்னும் சங்கடம் அந்த சின்ன பாப்பாவை நினைத்து தான். ஒவ்வொரு இடத்திலும் சென்று அவங்க வாக்கு கேட்ட விதம் சிறப்பு. ஆனால் தப்பில்லை, நாம் அதை நோக்கி தான் போய்க்கொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் அந்த இடத்தைத் தொடுவதற்கு எல்லா தகுதியும் அவங்களுக்கு இருக்கு. 

அரசியல்னா கமல் சாரின் பிரதர் ஒரு முறை அழகாக சொன்னார். யார் அடுத்தது அரசியலுக்கு வர வேண்டும் என வரிசைப்படுத்தும்போது மிக முக்கியமான இடத்தில் அன்புமணி ராமதாஸ் அவர்களைப் பற்றி சொன்னார். எனக்கும் ரொம்பப் பிடிக்கும், தகுதியின் அடிப்படையில் அவர்களுடைய அரசியல் பார்வை, சமூக நீதி பற்றி அவர்கள் பேசுவது, அப்பறம் இங்க இருக்க வரலாறும் தெரியணும், தமிழ்நாட்டின் புவியியல் பற்றி தெரியணும். நதிகளைப் பற்றிய அவருடைய பேச்சை நான் கேட்டேன். இவ்வளவு பேராற்றல், மிகப்பெரும் அறிவோட இருக்கவங்கள நாம தான் மிஸ் பண்றோம். தப்பு நம்ம பக்கம் தான் இருக்கு. அவங்களுக்கு அது இழப்பு இல்லை. வாழ்த்துகள் சார். இதுபோன்ற விளையாட்டு தொடர்பான விஷயங்களுக்கு ஆதரவு தரும், தகுதியான விஷயங்களை நோக்கி நாம் எப்போதும் இருக்க வேண்டும் என ஆசைப்படும் அன்புமணி மாதிரியான தலைவர்களை நாம் மிஸ் பண்ணக்கூடாது. இந்த விழாவில் கலந்துகொண்டது சந்தோஷம்” எனப் பேசியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 18வது  மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட சௌமியா அன்புமணி, திமுக வேட்பாளர் ஆ.மணியிடம் சுமார் 21 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"உங்களுக்கும் எனக்கும் ரத்த உறவு" ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மனம்விட்டு பேசிய ராகுல் காந்தி!
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Salem school | அரசுப் பள்ளிக்குள் கட்சிக்கொடி! சிக்கலில் தவெக நிர்வாகிகள்Bahujan samaj on Vijay flag |விஜய்க்கு சிக்கல்? கொடியில் வெடிச்ச சர்ச்சை!டெல்லிக்கு பறக்கும் கடிதம்TVK Flag | யாரை சீண்டுகிறார் விஜய்? த.வெ.க கொடி சொல்லும் SECRETSVijay Sangeetha issue : சங்கீதா ஏன் வரல?அழைக்காமல் தவிர்த்த விஜய்? தீயாய் பரவும் வதந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
நாட்டுடைமை ஆக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூல்கள்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
"உங்களுக்கும் எனக்கும் ரத்த உறவு" ஜம்மு காஷ்மீர் மக்களிடம் மனம்விட்டு பேசிய ராகுல் காந்தி!
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
Crime : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ஆசிரியர் சஸ்பெண்ட்.. ஆசிரியைகளிடம் விசாரணை
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
விரைவில் அறிமுகமாகிறது District செயலி - பேடிஎம் டிக்கெட்டிங் பிசினஸை வாங்கிய Zomato!
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
Watch Video : தம்பியை முத்தத்தால் நனைத்த அண்ணன்! 'வாழை' படம் பார்த்த பின் உச்சகட்ட உணர்ச்சியில் நெகிழ வைத்த சூரி 
ஜோதிடம் பார்த்து கட்சி கொடியை வடிவமைத்தாரா விஜய்? கட்சி கொடியில் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?
ஜோதிடம் பார்த்து கட்சி கொடியை வடிவமைத்தாரா விஜய்? கட்சி கொடியில் இருக்கும் ஜோதிட ரகசியம் என்ன?
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Vijay : “நடிகர் விஜய் GOATஆ அல்லது FOATஆ”சக்கரவியூகத்தில் நுழையும் த.வெ.க. - நடக்கப்போவது என்ன?
TVK Flag: தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
தவெகவுக்கு ஆரம்பமே சிக்கல்? விஜயின் கட்சி கொடியில் வெடிச்ச சர்ச்சை.. டெல்லிக்கு பறக்கும் கடிதம்!
Embed widget