Watch Video: அண்ணன் வந்தாலே ஆட்டம்தான்! துள்ளல் நடனத்துடன் என்ட்ரி தந்த கிங் கோலி - நீங்களே பாருங்க
இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனாகவும் திகழ்பவர் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக திகழ்பவர் விராட் கோலி.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றது.
ஆட்டம் போட்ட விராட் கோலி:
கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் தொடர் என்பதாலும், ரோகித் – கோலி கம்பேக் தந்ததாலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இலங்கைத் தொடரின் போது விராட் கோலி ஃபீல்டிங் செய்ய வரும்போது அணியினருக்கு நடுவில் நடனம் ஆடுகிறார். இதை பெவிலியனில் இருந்த ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Unseen video of Virat Kohli during the Sri Lankan tour. 😂❤️pic.twitter.com/0sfWKH0ZaF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 3, 2024
சேஸ் மாஸ்டர் கலகலப்பு:
பேட்டிங்கில் எந்தளவு ஆக்ரோஷமானவராக விராட் கோலி இருக்கிறாரோ அதே அளவு அவர் மிகவும் கலகலகப்பான நபராக திகழ்பவர். களத்தில் பல முறை நடனம் ஆடியும், பொதுவெளியில் வீரர்களுடன் நடனம் ஆடியும் பல முறை ரசிகர்களையும், சக வீரர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளார். விராட் கோலியின் கலகலப்பான நடன வீடியோக்கள் ஏராளமாக இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்டாவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி இலங்கைக்கு எதிரான தொடரில் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் அடுத்து வரும் வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கருதப்படுகிறது.