Monicka Richard : “சிவகார்த்திகேயன் துரோகம் செய்தாரா? அவர் பாவம்” - இமானுக்கு முதல் மனைவி மோனிகா பதிலடி
Monicka Richard : இமானுக்கு இப்போது எந்த படமும் இல்லை என்பதால் இப்படி பேசி பப்ளிசிட்டி பெற நினைக்கிறார். இதனால் சிவகார்த்திகேயன் தான் பாதிக்கப்படுகிறார் - இமான் முதல் மனைவி மோனிகா.
தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவரான டி. இமான் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறார். டி. இமான், சிவகார்த்திகேயன் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
12 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முறித்து கொண்டு கடந்த 2021ம் ஆண்டு அமலி என்பவருடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இமான். இரண்டாவது திருமணம் குறித்த செய்தி வெளியான உடனே விவாகரத்திற்கான காரணம் குறித்து பல விவாதங்கள் நடைபெற்றன. ஆனால் அதற்கான காரணமாக இமான் தற்போது சிவகார்த்திகேயன் மீது குற்றம் சாட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் துரோகம் செய்து விட்டதாக இமான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இமான் முதல் மனைவி பேசுகையில் "குடும்ப நண்பராக இருந்த சிவகார்த்திகேயன் எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்க கூடாது என்பதற்காக நிறைய முயற்சிகளை எடுத்தார். குடும்ப நண்பராக இருக்கையில் தனது நண்பனின் குடும்பம் சிதறி விடக்கூடாது என அவர் நினைத்தார். எங்களோட விவாகரத்து விஷயத்துக்கு சிவகார்த்திகேயன் இமானுக்கு சப்போர்ட் செய்யாததை தான் அவர் துரோகம் செய்து விட்டார் என குறிப்பிடுகிறார் என்பது எனக்கு புரிகிறது.
முன்னாடியே இரண்டாவது மனைவியை செலெக்ட் செய்து வைத்துவிட்டு தான் என்னிடம் இருந்து அவசர அவசரமாக விவாகரத்து வாங்கினார். விவாகரத்துக்கு சம்மதம் சொல்லவில்லை என்றால் என்னுடைய அப்பாவை கொலை செய்து விடுவோம் என அரசியல்வாதிகள் மூலம் மிரட்டி என்னை சம்மதிக்க வைத்தார்.
விவாகரத்து பெற்றதற்காக எனக்கு ஜீவனாம்சம் கூட எதுவும் கொடுக்கவில்லை. என்னுடைய இரண்டு மகள்களும் தான் எனக்கு வேண்டும் என சொல்லிவிட்டேன். இந்த இரண்டாவது திருமணம் பற்றி குழந்தைகள் கிட்ட கூட சொல்லவில்லை. சில நாட்களுக்கு பிறகு குழந்தைகளை பார்க்க வந்தார். ஆனால் குழந்தைகள் பார்க்க விருப்பமில்லை என கூறிவிட்டார்கள். அவர் நல்லவராக இருந்தால் குழந்தை ஏன் அவரை நிகரிக்கணும்.
ஒருவர் பிஸியாக இருந்தால் அவர்களின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட் பற்றி தானே பேசுவார்கள். ஆனால் அவர் குடும்ப கதைகளை பேசுகிறார் என்றால் அவருக்கு இப்போது வேறு எந்த படமும் இல்லை. ஏதாவது வதந்தி பற்றி பேசி பப்ளிசிட்டி செய்து கொள்ள வேண்டும் என்று தான் இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார். எங்கள் விவாகரத்து சமயத்தில் சிவகார்த்திகேயன் பேசியது தான். அதற்கு பிறகு அவருடன் நான் பேசவே இல்லை. இதன் மூலம் பாதிக்கப்படுவது பாவம் சிவகார்த்திகேயன் தான்.
கடவுளின் ஆசீர்வாதத்தால் நான் சொந்தமாக ஒரு தொழிலை துவங்கி 30 பேருக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு இந்த மூணு வருஷத்தில் வளர்ந்துவிட்டேன். இன்னும் சொல்ல போனால் இதை பத்தி நினைக்க கூட எனக்கு நேரமில்லை. அவரின் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்தால் இப்படி புலம்ப மாட்டார். தப்பு செய்தவங்க தான் இன்டர்வியூ கொடுத்து புலம்புவாங்க" என பேசி இருந்தார் மோனிகா ரிச்சர்ட்.