![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Ilayaraja New Year Wishes: ‛காலேஜ் டீனேஜ் பெண்கள்.. எல்லோர்க்கும் என் மீது கண்கள்’ இளையராஜாவின் புதுமை புத்தாண்டு வாழ்த்து!
இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
![Ilayaraja New Year Wishes: ‛காலேஜ் டீனேஜ் பெண்கள்.. எல்லோர்க்கும் என் மீது கண்கள்’ இளையராஜாவின் புதுமை புத்தாண்டு வாழ்த்து! Ilayaraja Happy New Year 2022 Wishes to all, ilamai itho itho- Watch Video Ilayaraja New Year Wishes: ‛காலேஜ் டீனேஜ் பெண்கள்.. எல்லோர்க்கும் என் மீது கண்கள்’ இளையராஜாவின் புதுமை புத்தாண்டு வாழ்த்து!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/31/a312a3ba7b3587efee86c09e53aa455f_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.
Wish you all happy new year 2022.#HappyNewYear2022 pic.twitter.com/cSlW4BKQGa
— Ilaiyaraaja (@ilaiyaraaja) December 31, 2021
தமிழ் திரையுலகில் தனது இசை சாம்ராஜ்யத்தால் தலைமுறைகளை கடந்து நிற்பவர் இசைஞானி இளையராஜா. இவர் இசையமைத்துள்ள பாடல்கள் இன்றும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது இளையராஜா விஷால் நடிப்பில் உருவாகி வரும் துப்பறிவாளன் 2, விஜய் சேதுபதி, சூரி ஆகியோரது நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
முன்னதாக நேற்று மாலை இளையராஜாவின் உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. அதற்கு விளக்கம் அளித்த அவரது மகன் கார்த்திக் ராஜா அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக விளக்கம் அளித்தார்.
பொதுவாக அமைதியாக இருக்கும் இளையராஜா, அண்மை காலமாக தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அண்மையில், சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடலை அவரது மகனும் இசையமைப்பாளருமான யுவன்ஷங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்திருந்தார். இந்தப் பாடல் மிகபெரிய ஹிட்டானது. இந்த நிலையில் அந்தப் பாடல் குறித்து இளையராஜா வீடியோ வெளியிட்டு இருந்தார்.
View this post on Instagram
This morning for my fans specially...#Ilaiyaraaja pic.twitter.com/nakupxJaJH
— Ilaiyaraaja (@ilaiyaraaja) November 25, 2021
Very happy to see your responses & waiting to hear in other languages too pic.twitter.com/1Pt0XefubM
— Ilaiyaraaja (@ilaiyaraaja) November 27, 2021
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)