Mallika Sherawat: ‛அழைக்கும் போது படுக்கைக்கு போகணும்...’ -பாலிவுட் நடிகர்களை பிரிந்து மேய்ந்த மல்லிகா ஷெராவத்!
எந்த விதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பாலிவுட் நடிகர்கள் பற்றி பேசியிருக்கும் கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன.
எந்த விதமான கேள்விகளுக்கும் பதிலளிக்கும் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பாலிவுட் நடிகர்கள் பற்றி பேசியிருக்கும் கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய மல்லிகா ஷெராவத், “ முன்னணி நடிகர்கள் பலரும் என்னுடன் நடிப்பதை நிராகரித்தனர், காரணம் நான் சமரசம் செய்து கொள்வதில்லை. இது மிகவும் சிம்பிளான விஷயம். அவர்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும், அவர்களிடம் சமரசமாக செல்லும் நடிகைகளைதான் விரும்புகின்றனர். ஆனால் நான் அப்படியானவள் இல்லை.
View this post on Instagram
யாருடைய விருப்பத்திற்கு நான் என்னை உட்படுத்த விரும்ப வில்லை. உட்காரவேண்டும், நிற்கவேண்டும் அது வேண்டுமானாலும் செய்ய வேண்டும். காலை 3 மணிக்கு அவர்கள் கூப்பிடும் போதும் அவர்கள் வீட்டுக்கு நீங்கள் செல்ல வேண்டும். இப்படி நீங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் நீங்கள் அந்தப்படத்தை செய்ய முடியும். நீங்கள் செல்ல வில்லை என்றால் அந்தப்படத்தில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்” என்று பேசியிருக்கிறார்.
View this post on Instagram
முன்னதாக, கடந்த 2002 ஆம் ஆண்டில் வெளியான ‘மர்டர்’ படம் மூலம் பிரபலமான மல்லிகா ஷெராவத்துக்கு, கவனம் ஈர்க்கும் வகையில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இது குறித்து பேசியிருக்கும் மல்லிகா, “ நான் முடிந்த அளவு முயற்சி செய்தேன். நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்ய முயன்றேன். அதில் சில கதாபாத்திரங்கள் நன்றாக அமைந்தன. சிலவை அப்படி அமையவில்லை. இது ஒரு நடிகையின் பயணத்தில் ஒரு பகுதி. ஆனால் மொத்தமாக பார்க்கும் போது அது நன்றாகவே அமைந்து இருக்கிறது” என்றார்.
முன்னதாக இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘குரு’, ‘தசாவதாரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த மல்லிகா சில வருடங்களுக்கு முன்னதாக வெளியான குஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ஆகே/ ஆகே திரைப்படம் கடந்த ஜூலை 22 ஆம் தேதி வெளியானது.