KGF : "ஷாருக்கான் கே.ஜி.எஃப் படத்தில் நடித்தால் ஏத்துக்கமாட்டாங்க.." : ’ஓம்’ திரைப்பட எழுத்தாளர் ஓப்பன் டாக்
தென்னிந்திய திரைப்படங்களில் அதிக ‘தர்க்கமற்ற செயல்கள்’ உள்ளன என்றும் கூறினார்.
அதித்யராய் கபூர் மற்றும் ஷயிரா அகமது கான் நடிப்பில் உருவான ‘ராஷ்டிர கவச் ஓம்’ திரைப்படம் நேற்று வெளியானது. படத்துக்கு திரைக்கதை எழுதிய ராஜ் சலூஜா பிற மொழிப் படங்கள் இந்திப் படங்களைக் கடந்து பேசப்படுவதைக் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அது பற்றி கருத்து கூறியுள்ள அவர், தென்னிந்திய சினிமாத் துறையில் பார்வையாளர்களால் 'எந்த மோசமான விஷயத்தையும்' ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் பாலிவுட்டில் இருந்து ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். இந்திய அனைத்து மொழிப் படங்களின் எழுச்சியைப் பற்றி மனம் திறந்த அவர், இந்தி சினிமாவை விட தென்னிந்திய திரைப்படங்களில் அதிக ‘தர்க்கமற்ற செயல்கள்’ உள்ளன என்றும் கூறினார்.
View this post on Instagram
அவரது திரைப்படமான ஓம் பற்றி கேட்டபோது ஹாலிவுட்டில் இயக்கினாலும் பாலிவுட்டில் இயக்கினாலும் ஆக்ஷன் படங்களில் லாஜிக் இருக்காதுதானே என்றார். கபில் வர்மா இயக்கிய இந்தப் படத்துக்கு ‘ஓம் தி பேட்டில் வித் இன்’ என்று முன்பு பெயரிடப்பட்டிருந்தது.
மேலும் பேசிய அவர்,“யாரை ஏற்க வேண்டும், யாரை ஏற்கக்கூடாது என்பதை சினிமா பார்வையாளர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். உதாரணத்திற்கு, கேஜிஎஃப் படத்தில் ஷாருக்கான் நடித்தால், ஷாருக்கானால் அதில் வரும் ஆக்ஷன் காட்சிகளைச் செய்ய முடியும் என்பதை ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் யஷ் அதைச் செய்கிறார் என்றால், மக்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்கள். ஏன்? ஏனென்றால், தென்னிந்திய நடிகர்களால் இதைச் செய்ய முடியும் என்பதை இந்தியப் பார்வையாளர்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் அவர்கள் எந்த ஆபத்தான காட்சியையும் நடிக்க முடியும் என்று அவர்கள் முன்கூட்டியே தீர்மானித்துவிட்டார்கள்” என்றார்.
View this post on Instagram