Rakhi Sawant : வயாகரா போல இருந்தது.. பூஸ்டர் தடுப்பூசி குறித்து பாலிவுட் நடிகையின் சர்ச்சை பேச்சு..
அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் ராக்கி சாவந்த். தற்போது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகரா மருந்துடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இந்தியில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ராக்கி சாவந்த். இவர் தமிழில், என் சகியே, முத்திரை போன்ற திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார். இவர் மும்பை தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை 2019-ல் ரகசிய திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனக்கு திருமணமான ரகசியத்தை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடைத்தார்.
திருமண வாழ்க்கை
ரிதேஷ், இவருக்கு முன்பாகவே வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.ரிதேஷும் திருமணமான பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராக்கி சாவந்த்தை விட்டுப் பிரிந்தார். ராக்கி சாவந்த் தற்போது ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார். அடிக்கடி எதையாவது கூறி சர்ச்சையில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார் ராக்கி சாவந்த்.
View this post on Instagram
சர்ச்சைக்குரிய பேச்சு
அந்த வகையில் தற்போது கொரோனா பூஸ்டர் தடுப்பூசியை வயாகரா மருந்துடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். மும்பை விமான நிலையத்தில் பூஸ்டர் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்து பேசிய ராக்கி சாவந்த், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றதல்ல என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளார்.
இரண்டு நாட்களாக தூங்கமுடியவில்லை
அவர் பேசுகையில்,"நான் பூஸ்டர் தடுப்பூசி எடுத்து கொண்டேன். அதன் பிறகு இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை. தடுப்பூசி எடுத்ததில் இருந்து என் இதயத்துடிப்பு மிகவும் வேகமாக உள்ளது, என் உடல் சோர்வாக இருக்கிறது, முகம் வீங்கி விட்டது, அரை மணிநேரம் கூட தூங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். நான் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறேன்", என்றார்.
வயாகராபோல் உள்ளது
மேலும் பேசிய அவர், "இந்த கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இளம் வயதினருக்கு ஏற்றதல்ல என்பதால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பூஸ்டர் டோஸ் வழங்கப்பட வேண்டும். இது ஷிலாஜித் அல்லது வயாகரா போல இருக்கிறது",என்று அவர் கூறினார். இவரின் சர்ச்சைக்குரிய இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்