Aishwarya Dhanush | ‛அவரை ரொம்ப மிஸ் பண்றேன்...’ - தனுஷ் விழாவில் ஐஸ்வர்யா உருக்கமான பேச்சு!
அவருக்கு ரொம்ப பிடிச்சுபோயி, நாங்க ரெண்டு பேரும் ரொம்ப கம்ஃபோர்ட் ஆகிட்டோம், மிகவும் வித்யாசமாக சிந்திக்கக்கூடியவர், புதிதாக சிந்திப்பவர் அவர்.
கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டாப்சி, டேனியல் பாலாஜி ஆகியோருடன் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்து 2015ல் வெளிவந்த படம் தான் வை ராஜா வை. இதற்கு முன் ஐஸ்வர்யா 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வை ராஜா வை திரைப்படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். அந்த நேரத்தில் அந்த திரைப்படத்திற்கு ஒரு விழா ஒன்று நடைபெற்றது, அந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா, படத்தில் நடித்தவர்கள் வேலை செய்பவர்கள் பற்றி பேசினார்.
அப்போது நடந்த விழாவில் ஐஸ்வர்யா, "இந்த கால சினிமாவுல சில பழைய விஷயங்கள் வேண்டாம், கட் பண்ணிடலாம்ன்னு சொல்லும்போது, இல்லமா சினிமாவுக்கு இதெல்லாம் ரொம்ப அவசியம், அடிப்படை, கண்டிப்பா இருக்கணும்னு VT விஜயன் சார் தான் சொன்னார். வேல்ராஜ் சார் மாதிரி வேகமாவும் தரமாவும் வேலை பாக்குற ஆட்கள் ரொம்ப கம்மி… அவ்வளவு வேகமா முடிப்பார் எல்லாத்தையும். க்ரூஸ் கப்பலில் நடந்த போர்ஷனை எடுப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன. நேரம் குறைவாகத்தான் கிடைக்கும், அந்த நேரத்திற்குள் அவ்வளவு ஷாட்டுகளையும் எடுத்தது பெரிய விஷயம், அவர் இல்லாமல் சாத்தியமே இல்லை. அவரை இன்னைக்கு நான் ரொம்ப மிஸ் பன்றேன். விவேக் சார் இந்த படத்துக்குள்ள வந்தது பெரிய மேஜிக், நான் அவரோட பெரிய ஃபேன், ரொம்ப நாளா ஸ்க்ரீன்ல பாக்கலன்ற ஏக்கம் எனக்கும் இருந்தது. ரொம்ப பெரிய ரோல் இல்ல படத்துல… கெஸ்ட் ரோல்க்குதான் கேட்ருந்தோம், இதை கொஞ்சம் நீட்டிச்சு பெரிய ரோல் ஆக்கினா நல்லாருக்கும்ன்னு சொன்னார். அதே மாதிரி ஆக்குனோம். அதே போல படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், கவுதம், டாப்ஸி, ப்ரியா, சதீஷ், டேனியல் பாலாஜி, எல்லாருமே முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. எல்லாருக்குமே அவங்க இதுவரைக்கும் பன்னதுல இருந்து வேற மாதிரியான ரோல். எல்லாருமே அவங்க இமேஜ உடைச்சு புதுசா ஒரு ரோல் பண்ணிருக்காங்க. மதன் கார்கி படத்துல பாட்டு எழுத தான் வந்தாரு, ஆனா கதைய நாங்க பேச ஆரம்பிச்சு, அவருக்கு ரொம்ப பிடிச்சுபோயி, நாங்க ரெண்டு பேரும் அதுல ரொம்ப கம்ஃபோர்ட் ஆகிட்டோம், அதுல வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டோம். மிகவும் வித்யாசமாக சிந்திக்கக்கூடியவர், புதிதாக சிந்திப்பவர், இந்த திரைப்படத்திற்கு அவரது பங்கு பெரிது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு முன்னணி நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், 18 வருடங்களுக்கு இருவரும் தங்கள் இல்லற வாழ்வில் இருந்து பிரிவதாக தங்களது சமூகவலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர். அந்த அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.