"வேதாளத்துக்கு பிறகு விஜய் கூட நடிக்குற எண்ணம் இல்லை" - நடிகை லட்சுமி மேனன் ஓபன் டாக்!
"அஜித் ரொம்ப ஓப்பனா அவரு வாழ்க்கைல நடந்த விஷயங்கள் எல்லாம் சொன்னாரு. எதையும் மறைச்சு வைக்குற நபர் இல்ல அவர்." என்று பகிர்ந்துகொண்டார்.
லட்சுமி மேனன் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஆயிரத்து சில்லறையாவது தமிழ் திரைப்பட நடிகை. இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் நடித்துதான் பிரபலம் ஆனார். முதன்முதலாக மலையாளத்தில் வெளிவந்த ‘ரகுவிண்டெ சுவந்தம் ரசியா’ (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, கும்கி மற்றும் சுந்தர பாண்டியன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகம் அவரை திரும்பி பார்த்தது. 2014-ம் ஆண்டு வெளியான ‘நான் சிகப்பு’ மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் ‘றெக்க’ படத்தில் நடித்த பிறகு இவரை திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை. பின்னர் விக்ரம் பிரபுவுடன் ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது திகில் கதையம்சம் கொண்ட படம் ஆகும்.
இந்த நிலையில் இவரிடம் ஒரு தனியார் யூட்யூப் சேனல் பேட்டி எடுத்திருந்தது. அதில் ஸ்வாரஸ்யமான பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பேசிய நடிகை லட்சுமி மேனனிடம் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு முக்கியமான இன்டர்வெல் சீனில் நடித்த அஜித்தின் நடிப்பு திறனை பற்றி கூறினார். அஜித் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றி பேசுகையில், "அஜித் ரொம்ப ஓப்பனா அவரு வாழ்க்கைல நடந்த விஷயங்கள் எல்லாம் சொன்னாரு. அது எல்லாத்தையும் சொல்ல முடியாது. ஆனா எதையும் மறைச்சு வைக்குற நபர் இல்ல அவர். ஒரு நாள் இட்லி, சாம்பார், சட்னி, வடைன்னு சாப்பாடு மரண டேஸ்ட்டா சமைச்சு கொடுத்தார். அப்புறம் எனக்கு என்ன பிடிக்கும்ன்னு கேட்டு அதையும் செஞ்சு கொடுத்தார். நான் மீன் பிடிக்கும்ன்னு சொன்னேன், ரொம்ப டேஸ்ட்டா செஞ்சு கொடுத்தார்." என்று கூறினார்.
வேதாளம் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு அவரை சந்தித்தீர்களா, ஷூட்டிங் முடியும்போது என்ன சொன்னார் என்று கேட்டபோது, "இல்லை, ஷூட்டிங் முடிஞ்சத்துக்கு அப்புறம் அவரை பார்க்கவே இல்லை. கடைசியா போகும்போதுன்னு ஸ்பெஷலா எதுவும் சொல்லல, பை, டேக் கேர் சொன்னாரு அவ்ளோதான், ஷூட்டிங் நடக்கும்போது நாங்க பேசிக்கொண்டதுதான் அதிகம்." என்றார்.
அஜித் படத்தில் நடித்ததும் விஜய் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்று கேட்ட கேள்விக்கு, "எல்லோரும் என்னிடம் சொன்னார்கள், ஆனால் எனக்கு அதுமாதிரி எதுவும் எண்ணம் இல்லை. ஆசை படலாம், ஆனால் தேடி போற வேலை எல்லாம் இல்ல. வந்தா பண்ணலாம், அவ்வளவுதான்." என்று யதார்த்தமாக கூறினார்.