Taapsee Pannu: ஆமா அவங்ககூடல்லாம் நான் டேட்டிங் பண்ணிருக்கேன்.. டாப்ஸி ஓபன் டாக்..
தான் பயனற்ற காதலர்களுடன் டேட்டிங்கிங் வைத்திருந்தாக நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
![Taapsee Pannu: ஆமா அவங்ககூடல்லாம் நான் டேட்டிங் பண்ணிருக்கேன்.. டாப்ஸி ஓபன் டாக்.. I have dated many useless boyfriends Taapsee Pannu Taapsee Pannu: ஆமா அவங்ககூடல்லாம் நான் டேட்டிங் பண்ணிருக்கேன்.. டாப்ஸி ஓபன் டாக்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/03/fe14e8cd5270df4f7193b84a2a487f19_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் டாப்ஸியின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி கவனம் ஈர்த்த படம் மிதாலி ராஜ். இவரது நடிப்பில் வருகிற பிப்ரவரி 4 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லூப் லப்பேட்டா’. இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக பாலிவுட் பிரபல ஊடகத்திற்கு டாப்ஸி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவரிடம் ரேபிட் ஃபையர் முறையில் கேள்வி கேட்கப்பட்டது.
அந்தப் பேட்டியில் உங்களை பொருத்தவரை ஒரு சரியான காதலனை எப்படி வரையிறுப்பீர்கள் என்று கேட்டபோது, “ஒரு நல்ல காதலன் இந்தப் படத்தில் இடம் பெற்ற சத்யா போன்று சூதாட்டத்தின் மூலம் பணத்தை சம்பாதிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும்” என்றார். மேலும் நீங்கள் பயனில்லாத காதலர்களுடன் டேட் செய்திருக்கிறீர்களா என்று கேட்டபோது, ஆம் என்று பதிலளித்த டாப்ஸி, நிறைய பேர் என்று கூறி சிரித்தார்.
View this post on Instagram
சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியா தயாரித்துள்ள லூப் லப்பேட்டா இயக்குனர் படத்தை ஆகாஷ் பாட்டியா இயக்கியுள்ளார். டாப்ஸி உடன் இணைந்து தாஹிர் ராஜ் பாசின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், டிப்யெண்டு பட்டாச்சாரியா மற்றும் ஸ்ரேயா தன்வந்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லூப் லப்பேட்டா படத்திற்கு யாஷ் கண்ணா ஒளிப்பதிவில், கௌரவ் பரிக் இசை அமைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)