ஹாட் ஸ்டார் ஓடிடி-யில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 'ஹார்ட் பீட் சீசன் 2' ரிலீஸ் எப்போது?
ரசிகர்களின் மனம் கவர்ந்த, 'ஹார்ட் பீட்' சீசன் 2 வெப் தொடரின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

’ஹார்ட் பீட்’ வெப் சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக் அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார்.
ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒரு மருத்துவமனையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த வெப் தொடர் தான் 'ஹார்ட் பீட்'. இந்த வெப் தொடரில், காதல், எமோஷன், காமெடி, என அனைத்து விதமான உணர்வுகள் இருந்தது. ஒரு ஜனரஞ்சகமான தொடராகவும் இது பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஹெர்ட் பீட் சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக ஒரு நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதில் யோகலட்சுமி வெளியீட்டு தேதியை மே 22 என்று அறிவித்துள்ளார்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஜியோ ஹாட் ஸ்டார் வெளியீட்டு தேதியுடன் புதிய டைட்டில் டிராக் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ள ’ஹார்ட்பீட் சீசன் 2’ பல புது கதாபாத்திரங்கள், தீர்க்கப்படாத புதிர்கள் மற்றும் புதிய கதைக்களத்தைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.





















