Tom Cruise: ஒரே வாரத்தில் ரிலீசாகும் மூன்று படங்கள்.. ஆர்வமாக காத்திருக்கும் டாம் குரூஸ்.. எந்த படத்துக்கு தெரியுமா?
உலகமே ஆர்வமாக டாம் குரூஸ் நடித்திருக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தை எதிர்பார்த்து வருகிறது. ஆனால் அவரோ மிக ஆர்வமாக எதிர்பர்த்துக் காத்திருக்கும் திரைப்படம் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
உலகமே ஆர்வமாக டாம் குரூஸ் நடித்திருக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தை எதிர்பார்த்து வருகிறது. ஆனால் அவரோ மிக ஆர்வமாக எதிர்பர்த்துக் காத்திருக்கும் திரைப்படம் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.
மிஷன் இம்பாசிபிள் பெயரில் வெளிவரும் ஒவ்வொரு பாகங்களுக்கும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதுவரை இந்த படத்தில் மொத்தம் ஆறு பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த ஆறு பாகங்களும் அனைத்து வகையிலும் ரசிகர்களை திருப்திபடுத்தி இருக்கின்றது. ஒவ்வொரு படத்திலும் டாம் க்ரூஸ் ஏதாவது ஒரு புதிய சாதனையுடன் களமிறங்குவார். குறிப்பாக படத்தில் தான் நடிக்கும் ஸ்டண்ட் காட்சிகளை டூப் இல்லாமல் அவரே செய்துவருவது இந்தப் படங்களை ரசிகர்கள் மிக ஈடுபாட்டுடன் பார்ப்பதற்கு மற்றொரு காரணம்.
தற்போது மிஷன் இம்பாசிபள் படத்தின் 7-ஆம் பாகமான ’டெத் ரெக்கனிங்’ ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லரை ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கான அனைத்து கூறுகளைக் கொண்டிருக்கிறது. வரும் ஜூலை 12 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.
ஓப்பன்ஹைமர்
மிஷன் இம்பாசிபள் படத்தைத் தொடர்ந்து சரியாக பத்து நாட்கள் இடைவெளியில் மேலும் இரண்டு மிகப்பெரிய ஹாலிவுட் படங்கள் வெளியாக இருக்கின்றன. கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கியிருக்கும் ஓப்பன்ஹைமர் மற்றும் கிரெட்ட கர்விக் இயக்கியிருக்கும் பார்பீ ஆகிய இரண்டு படங்களும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. இந்த இரண்டுப் படங்களை எதிர்பார்த்து ஒரு தனி ரசிகர் கூட்டம் காத்திருக்கிறது.
எந்தப் படத்தை பார்க்க காத்திருக்கிறார் டாம் குரூஸ்
அண்மையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மிஷன் இன்பாசிபிள் படத்தின் சிறப்புக் காட்சி ஓன்றில் கலந்துகொண்ட டாம் குரூஸ் இந்த இரண்டு படங்களில் எந்தப் படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார் என்று கேட்கப்பட்டபோது. “ நான் இந்த இரண்டு படங்களையும் அவை வெளியான முதல் வாரத்திலேயே பார்த்துவிடுவேன். முதலில் நான் ஓப்பன்ஹைமர் படத்தையும் அடுத்த நாள் பார்பீ படத்தையும் பார்க்க இருக்கிறேன் “ என்று பதிலளித்தார்.
ஓப்பன்ஹைமர்
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரான க்ரிஸ்டோஃபர் நோலன் அணு ஆயுதத்தைக் முதல் முதலில் கண்டுபிடித்தவரான ஒப்பன்ஹைமரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஓப்பன்ஹைமராக சிலியன் மர்ஃபி நடித்துள்ளார். கடந்த இருபது ஆண்டுகளாக நோலனின் படங்களில் நடித்துவரும் சிலியன் மர்ஃபி முதல் முறையாக பிரதானக் கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
பார்பீ
குழந்தைகளுக்கு அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரம் பார்பி. பார்பீயின் உலகத்தை படமாக்கியுள்ளார் ஹாலிவுட் இயக்குநர் கிரெட்டா கர்விக். ரயன் காஸ்லிங் மற்றும் மார்கரெட் ராபீ ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படத்தை மிக வண்ணமயமான ஒரு படமாக எடுக்க விரும்பியிருக்கிறார். பார்பியின் உலகத்தை கண்முன் உருவாக்குவதற்காக இயக்குநரும் ப்ரோடக்ஷன் டிசைனர் சாரா ஆகிய இருவரும் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஹாலிவுட்டில் வெளியாக இருக்கும் இந்த மூன்று படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருந்த வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.