மேலும் அறிய

Yohani De Silva Update: ஒரே பாட்டு- ஓஹோன்னு வாழ்க்கை - யோஹானி கடந்துவந்த பாதை!

யோஹானியின் பாடல் இந்தியாவில் பிரபலமடைந்ததையடுத்து, உலக அரங்கில் அறியவைக்க அவருக்கு மேடை போட்டு கொடுத்திருக்கிறது இந்தியா.

இசைக்கு மொழியே தேவையில்லை; நன்றாக உருவாக்கப்பட்ட ஒரு இசை கடல் கடந்து, மொழி கடந்து பயணம் செய்யும் என்பது வெறும் வாய்ச்சொல் இல்லை. அது உண்மையும் கூட. ஆங்கிலமே தெரியாத பலர் மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்ததும், இந்தியே தெரியாத தமிழர்கள் ஹிந்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்ததும் முந்தைய வரலாறு. யூடியூப் போன்ற ஊடகங்கள் வருகைக்குப் பின் இசை பயணிக்கும் வேகம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒரு பாடல் எப்போது ஹிட்டடிக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாத வகையில் இருக்கிறது. இன்ஸ்டண்ட்டாக ஹிட்டடிக்கும் பாடல்கள் ஒருபக்கம் என்றால், காலம் கடந்து வெளிச்சத்துக்கு வரும் பாடல்கள் ஒருபக்கம்.

இன்ஸ்டண்ட் ஹிட்டிற்கு சமீபத்திய உதாரணம் பரம் சுந்தரி. உலக அளவிலான டாப் 10 பாடல்கள் பட்டியலில் 8 வாரங்களைக் கடந்தும் இருக்கிறது. லேட்டாக ஹிட்டடித்த பாடலுக்கு சமீபத்திய உதாரணம், மனிகே மெஹே ஹிதே பாடல் தான். “மனிகெ மெகெ ஹிதே முதுலே நுரா ஹங்கும், யாவி அவிலாவி” என்ற வரிகள் தான் இளசுகள் முனுமுனுக்கும் லேட்டஸ்ட் லிரிக்ஸ். அமிதாப் பச்சன் கூட “இந்த பாடலை கேட்பதிலிருந்து நிறுத்தவே முடியவில்லை; இரவு முழுவதும் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இத்தனைக்கும் இந்த வரிகள் இந்திய மொழியே கிடையாது. ஆனால், இந்தியாவின் அத்தனை மொழி பேசும் மாநிலங்களிலும் தாறுமாறு ஹிட்.

உலக அளவிலான டாப் 10 பாடல்கள் வரிசையில் 7வது இடத்தில் இருக்கிறது மனிகே மெகே ஹிதே. மனிகே மெகே ஹிதே சதீஷன் இசையில், சதீசன் குரலில் கடந்த 2020லேயே வெளியாகியிருக்கிறது. யூடியூபில் ஒன்னரை கோடி பார்வையாளர்களை தாண்டியிருக்கிறது இந்த பாடல். இதை இப்போது முனுமுனுக்க வைத்திருப்பது பாடகி யோஹானியின் ஹஸ்கி குரல் தான். 2020ல் வெளியான இந்த பாடலை கவர் சாங்காக சங்கீத்தும், யோஹானியும் இணைந்து பாடி வெளியிட பாடல் சூப்பர் ஹிட். தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் வெளியாகியிருக்கிறது. ஆனால் சிங்கள மொழியில் வெளியான பாடல் தான் 12 கோடி பார்வையாளர்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

Yohani De Silva Update: ஒரே பாட்டு- ஓஹோன்னு வாழ்க்கை - யோஹானி கடந்துவந்த பாதை!

யோஹானி என்கிற யோஹானி திலோகா டி சில்வா இலங்கையின் கொழும்பு மாநகரில் 1993 ஜூலை 20ம் தேதி பிரசன்னா டி சில்வா, தினிதி டி சில்வா தம்பதியருக்கு இரண்டாவது மகளாகப் பிறந்தவர். யோஹானியின் குடும்பத்திற்கும் இசைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தந்தை இலங்கை ராணுவத்தில் பணியாற்றியவர். தாய் விமான பணிப்பெண். இளைய சகோதரி மருத்துவர். ஆனால், யோஹானிக்கு மட்டும் இசை மீது எப்படியோ ஆர்வம் தொற்றிக்கொள்ள அதை அறிந்த தாய் தினிதி அவருக்கு மேலும் பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்தார். பள்ளிப்படிப்புகளை முடித்து லண்டன் சென்ற யோஹானி லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் படிப்பை முடித்துவிட்டு இலங்கை திரும்பிவிட்டார். அதன் பின்னர் முழுவதும் இசை தான்.

பாடகி, பாடல் தயாரிப்பாளர், பாடலாசிரியர், ராப் பாடகி, யூடியூபர், இசைக்கருவிகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் தொழிலதிபர் என்று பல்வேறு முகங்கள் இருக்கிறது யோஹானிக்கு. யூடியூபராக ஆரம்பித்த யோஹானியின் இசை பயணத்தில் முதல் ஹிட் தேவியாங்கே பாரே என்ற ராப் கவர் பாடல் தான். அதன்பிறகு நிறைய கவர் பாடல்களை பாடியிருக்கிறார் யோஹானி. மொத்தமாக 23 பாடல்கள் தான் இதுவரை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். ஆனால், யோஹானியை உலகறிய வைத்தது “மனிகே மெகே ஹிதே” தான். இந்த பாடலை நாங்கள் ரெக்கார்டிங் செய்யும் போது எங்களுக்கென்று எந்த திட்டமும் இல்லை. எப்பொழுதும் போல இசையின் மீது உள்ள காதலில் தான் ஒரு கவர் பாடலை வெளியிட்டோம். இவ்வளவு ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை என்று கூறியிருக்கிறார் யோஹானி.

யோஹானியின் பாடல் இந்தியாவில் பிரபலமடைந்ததையடுத்து, உலக அரங்கில் அறியவைக்க அவருக்கு மேடை போட்டு கொடுத்திருக்கிறது இந்தியா. குருக்ராமிலும், ஹைதராபாத்திலும் பெர்ஃபார்ம் செய்யவிருக்கிறார் யோஹானி. இதைவிட முக்கியமாக இந்தியா- இலங்கைக்காக புதிய கலாச்சார தூதுவராக யோஹானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

யோஹானியின் பாடலை அமிதாப் பச்சன், டைகர் ஷெராஃப், மாதுரி தீக்‌ஷீத், பரினீதி சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் சிலாகித்திருக்கிறார்கள். யோஹானியின் வரலாறு சொல்வது ஒன்று தான். உங்களுடைய திறமையை விடாமுயற்சியோடு வெளிக்காட்டிக்கொண்டிருந்தால் காலம் உங்கள் திறமையை ஒருநாள் உலகறிய வைக்கும் என்பது தான். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி சம்பவம் திமுக அரசின் அலட்சியம்.. கண்டன ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டு
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
Breaking News LIVE: நீதியரசர் சந்துரு அறிக்கை : நகலை கிழித்து எறிந்த பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்
தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ; வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
Trichy Surya Siva: பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
பாஜக வேண்டாம், வேண்டவே வேண்டாம்.. சந்தானம் காமெடியை பகிர்ந்த சூர்யா சிவா
Indian 2: உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
உலகளவில் பிரமோஷன்.. மும்பையில் ரிலீசாகும் ட்ரெய்லர்.. இந்தியன் 2 பற்றிய சூப்பரான தகவல்கள்!
PM Modi: தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
தொடங்கியது மக்களவை முதல் கூட்டத்தொடர்.. எம்.பி.யாக பதவியேற்றார் பிரதமர் மோடி..!
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
கள்ளச்சாராயம் காய்ச்சினால் இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் சொல்லுங்க -தஞ்சை கலெக்டர்
Embed widget