மேலும் அறிய

Hema Malini: மும்பை டிராஃபிக்கோட மல்லுக்கட்ட முடியல... மெட்ரோவில் பயணித்த ஹேமமாலினி!

”மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின்போது நாம் கடினமான நாள்களை எதிர்கொண்டோம், ஆனால், நிச்சயம் அது மதிப்புமிக்கது” என ஹேமமாலினி பதிவிட்டுள்ளார்.

மும்பை டிராஃபிக்கை சமாளிக்க நடிகை ஹேமமாலினி மெட்ரோ ரயில், ஆட்டோ எனப் பயணித்து தன் வீட்டை அடைந்தது பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட் சென்று இந்தியாவின் முதல் ட்ரீம் கேர்ளாக உருவெடுத்து, பின் நடிகர் தர்மேந்திராவை காதல் திருமணம் செய்து வடக்கே கோலோச்சியவர் நடிகை ஹேமமாலினி. இந்திய சினிமாவில் பல ஆண்டு காலம் ஹீரோயினாகவும் கனவுக்கன்னியாகவும் கோலோச்சிய ஹேமமாலினி, பாஜகவில் இணைந்து தற்போது மதுரா தொகுதி மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.

தற்போது 74 வயதாகும் ஹேமமாலினி தொடர்ந்து தன் சர்ச்சைக் கருத்துகள், மற்றும் அதிரடி செயல்களுக்காக லைம்லைட்டில் இருந்து வருகிறார். அந்த வகையில் மும்பை ட்ராஃபிக்கை சமாளிக்க நடிகையும் அரசியல்வாதியுமான ஹேமமாலினி, மெட்ரோ ரயில், ஆட்டோ எனப் பயணித்து வீடு போய் சேர்ந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

பிங்க் நிற டாப், வெள்ளை பேண்ட், ஸ்லிங் பேக் என இன்றைய இளவயது பெண் போல் மெட்ரோவில் கேஷூவலாகப் பயணித்துள்ள ஹேமமாலினி இது குறித்து தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"இது ஒரு தனித்துவமான, அற்புதமான அனுபவம், இதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். தஹிசரை அடைய 2 மணிநேரம் காரில் பயணித்தேன், மிகவும் சோர்வாக இருந்தது. இதனால் நான் மெட்ரோவை முயற்சிக்க முடிவு செய்தேன்.

என்ன ஒரு சந்தோஷம்! மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளின்போது நாம் கடினமான நாள்களை எதிர்கொண்டோம், ஆனால், நிச்சயம் அது மதிப்புமிக்கது. சுத்தம், வேகம், அரை மணி நேரத்தில் ஜுஹூவை அடைந்து விட்டேன்” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

மேலும் ரயில் பயணத்தின்போது சக பயணிகளிடம் கேஷூவலாக உரையாடுவது, செல்ஃபி எடுத்துக்கொள்வது ஆகியவை அடங்கிய வீடியோக்களையும் ஹேமமாலினி பகிர்ந்துள்ளார்.

மேலும் அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் தன் வீட்டுக்குப் பயணித்த ஹேமமாலினி, அது குறித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். “என்ன ஒரு ட்ராஃபிக், மக்கள் எப்படி பயணிக்கிறார்கள் என்று  தெரியவில்லை, பயமாக இருந்தாலும் இந்தப் பயணம் சுவார்ஸ்யமாக இருக்கிறது” என ஜாலியாக வீடியோ பகிர்ந்துள்ளார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dream Girl Hema Malini (@dreamgirlhemamalini)

ஹேமமாலினியின் இந்த மெட்ரோ பயண வீடியோக்கள் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. இதே போல் சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகை சாரா அலி கானும் மும்பை டிராஃபிக்கை சமாளிக்க மெட்ரோவில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெரம்பூர் பிரச்சாரத்தில் விஜயை விமர்சித்த சத்யராஜ்...விஜய்க்கு ஆதரவாக சிபிராஜ் ட்வீட்
பெரம்பூர் பிரச்சாரத்தில் விஜயை விமர்சித்த சத்யராஜ்...விஜய்க்கு ஆதரவாக சிபிராஜ் ட்வீட்
சத்யஜோதி பிலிம்ஸ் மாஸ் லைன்அப்… சியான் 63 மூலம் புதிய அதிரடி!
சத்யஜோதி பிலிம்ஸ் மாஸ் லைன்அப்… சியான் 63 மூலம் புதிய அதிரடி!
கரிகால சோழனோடு விஜயை ஒப்பிட்ட பின்னணி பாடகர்...வைரலாகும் வீடியோ
கரிகால சோழனோடு விஜயை ஒப்பிட்ட பின்னணி பாடகர்...வைரலாகும் வீடியோ
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
Thalapathy Vijay: ஜனநாயகன் லீக்.. சத்தமில்லாமல் போலீஸில் புகார் கொடுத்த விஜய்.. நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Chennai Super 6 : சென்னை சூப்பர் 6.! அசத்தலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்- என்ன என்ன தெரியுமா.?
சென்னை சூப்பர் 6.! அசத்தலான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின்- என்ன என்ன தெரியுமா.?
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு
திடீர் டுவிஸ்ட்.! விஜய்க்கு ஷாக் கொடுத்த கிறிஸ்தவ அமைப்புகள்.! ஒட்டுமொத்தமாக ஸ்டாலினை சந்தித்து ஆதரவு
Anbumani: அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்க; விஜய் கனவு நிறைவேறும்: அன்புமணி வேண்டுகோள்
Anbumani: அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்க; விஜய் கனவு நிறைவேறும்: அன்புமணி வேண்டுகோள்
TN Election 2026: இதுதான் சீசன்! தேர்தல் களத்தில் ஓரளவு சம்பாதிச்சவங்க இவங்கதான்!
TN Election 2026: இதுதான் சீசன்! தேர்தல் களத்தில் ஓரளவு சம்பாதிச்சவங்க இவங்கதான்!
ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்
ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்
Edappadi TVK candidate : எடப்பாடியை வீழ்த்த செம பிளான் போட்ட விஜய்.! வெளியான முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா.?
எடப்பாடியை வீழ்த்த செம பிளான் போட்ட விஜய்.! வெளியான முக்கிய அறிவிப்பு- என்ன தெரியுமா.?
6 லட்சம் பட்ஜெட்டில் அசத்தலான காம்பேக்ட் எஸ்யூவி! வரப்போது Renault Bridger -எப்போது?
6 லட்சம் பட்ஜெட்டில் அசத்தலான காம்பேக்ட் எஸ்யூவி! வரப்போது Renault Bridger -எப்போது?
MK Stalin election campaign : செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரல.. Duty போட்டதே நான் தான்- இபிஎஸ்யை அலற விடும் ஸ்டாலின்
செந்தில் பாலாஜி அவராக கோவைக்கு வரல.. Duty போட்டதே நான் தான்- இபிஎஸ்யை அலற விடும் ஸ்டாலின்
Embed widget